Enable Javscript for better performance
தனியார் நிறுவன ஊழியரை தாக்கி பணம் பறிப்பு: ரயில்வே போலீஸார் விசாரணை- Dinamani

சுடச்சுட

    

    தனியார் நிறுவன ஊழியரை தாக்கி பணம் பறிப்பு: ரயில்வே போலீஸார் விசாரணை

    By DIN  |   Published on : 14th September 2019 04:49 AM  |   அ+அ அ-   |    |  


    சைதாப்பேட்டை ரயில்வே நடைமேடையில் நடந்து சென்று கொண்டிருந்த தனியார் நிறுவன ஊழியரை தாக்கி, பணம் மற்றும் செல்லிடப்பேசியை பறித்து சென்ற இருவரை ரயில்வே போலீஸார் தேடி வருகின்றனர்.
    சென்னை, சைதாப்பேட்டை புது காலனியைச் சேர்ந்தவர் ரமேஷ் (35). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.  ஓமந்தூரர் மருத்துவமனைக்கு செல்வதற்காக வெள்ளிக்கிழமை அதிகாலை சைதாப்பேட்டை ரயில் நிலையம் வந்தார்.  ரயில் நிலைய நடைமேடையில் அவர் நடந்து சென்றபோது, ரமேஷை இரண்டு பேர் மறித்து, செல்லிடப்பேசி, பணத்தை கொடுக்குமாறு மிரட்டினராம்.
    அவர் தர மறுக்கவே கத்தியால் தாக்கி ரூ.450 பணமும், செல்லிடப்பேசியையும் பறித்து விட்டு தப்பி ஓடிவிட்டனர். இது தொடர்பாக ரயில்வே போலீஸாருக்கு பயணிகள் தகவல் கொடுத்தனர். 
    தகவலின் பேரில், அந்த இடத்துக்கு வந்த ரயில்வே போலீஸார் ரமேஷை மீட்டு, ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து மாம்பலம் ரயில்வே போலீஸார் வழக்குப்பதிவு செய்து, அந்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
     

    kattana sevai