Enable Javscript for better performance
பேனர் விழுந்து இளம்பெண் பலி: அதிமுக முன்னாள் கவுன்சிலர் மீது வழக்குப் பதிவு- Dinamani

சுடச்சுட

    

    பேனர் விழுந்து இளம்பெண் பலி: அதிமுக முன்னாள் கவுன்சிலர் மீது வழக்குப் பதிவு

    By DIN  |   Published on : 14th September 2019 04:50 AM  |   அ+அ அ-   |    |  


    சென்னை பள்ளிக்கரணையில் இளம் பெண் சுபஸ்ரீ உயிரிழப்புக்கு காரணமான பேனர் வைத்த விவகாரத்தில் அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.  
    சென்னை, குரோம்பேட்டை பவானி நகரைச் சேர்ந்தவர் ரவி. இவரது மகள் சுபஸ்ரீ (23). பெருங்குடி கந்தன்சாவடியில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். சுபஸ்ரீ வியாழக்கிழமை பிற்பகல் தனது இருசக்கர வாகனத்தில் குரோம்பேட்டை-ரேடியல் சாலை வழியாக சென்றார். பள்ளிக்கரணை ரேடியல் சாலையில் அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் மகன் திருமண பேனர் வைக்கப்பட்டிருந்தது. அந்த வழியாக சுபஸ்ரீ வந்தபோது சாலையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த பேனரில் ஒன்று திடீரென சரிந்து அவர் மீது விழுந்தது. இதில்  நிலைதடுமாறிய சுபஸ்ரீ  இருசக்கர வாகனத்துடன் சாலையின் நடுவில் விழுந்தார். அப்போது அவ்வழியாக வந்த தண்ணீர் லாரி  மோதியதில் அவர் அதே இடத்தில் உடல் நசுங்கி  உயிரிழந்தார்.
    இந்த விபத்து தொடர்பாக செயிண்ட் தாமஸ் மவுண்ட்   போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார்  வழக்குப் பதிவு செய்து பிகாரை சேர்ந்த லாரி ஓட்டுநர் மனோஜ் என்பவரை கைது செய்தனர். இந்த விபத்தையடுத்து சாலையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த அதிமுக கொடிகள், பேனர்கள் உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டன.
    இந்த வழக்கை போக்குவரத்து போலீஸார்  பதிவு செய்வதா? அல்லது பள்ளிக்கரணை சட்டம்- ஒழுங்கு போலீஸார் வழக்குப்பதிவு செய்வதா? என்பது குறித்து அரை மணி நேரம் வாக்குவாதம் நடந்தது. இதனால் சுபஸ்ரீயின் உடல் நீண்ட நேரம் சாலையிலேயே கிடந்தது. பின்னர் செயிண்ட் தாமஸ் மவுண்ட் போக்குவரத்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து சுபஸ்ரீயின் உடலை மருத்துவ பரிசோதனைக்காக குரோம்பேட்டை  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
    சம்பவம் நடந்த இடத்தில் அனுமதி பெறாமல் பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து சென்னை மாநகராட்சி உதவி பொறியாளர் கமல்ராஜ், பேனர் வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளிக்கரணை காவல் நிலையத்தில்  புகார் செய்தார்.  இதையடுத்து அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதுகுறித்து அவரிடம் பள்ளிக்கரணை போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.  மேலும், இளம்பெண் சுபஸ்ரீ  உயிரிழப்புக்குக் காரணமான, பேனரை அச்சடித்த அச்சகத்துக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.
     

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    kattana sevai
    flipboard facebook twitter whatsapp