மெட்ரோ ரயில் நிலையங்களில் கூடுதலாக 20 சீருந்து சேவை

மெட்ரோ ரயில் நிலையங்களில் பயணிகள் வசதிக்காக, கூடுதலாக 20 சீருந்து (கேப்ஸ்) சேவைகளை விரைவில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது .

மெட்ரோ ரயில் நிலையங்களில் பயணிகள் வசதிக்காக, கூடுதலாக 20 சீருந்து (கேப்ஸ்) சேவைகளை விரைவில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது .
சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், முதல் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் முடிந்து, விமான நிலையம் -வண்ணாரப்பேட்டை வரையும், சென்ட்ரல்-பரங்கிமலை வரையும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரயில்களில் தினசரி சராசரி 98 ஆயிரம் பயணிகள் பயணம் செய்கின்றனர்.
இதற்கிடையில், மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்தும் பயணிகளுக்கான போக்குவரத்து இணைப்பை மேலும் எளிமையாக்கும் வகையில், ஷேர் ஆட்டோ, கார்களைப் பயன்படுத்த ஷேர் டிரிப் முறை கடந்த ஆண்டு ஆகஸ்ட் 11-ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது. மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து 3 கி.மீ. சுற்றளவில் உள்ள இடங்களுக்கு ஷேர் ஆட்டோக்கள், கார்கள் இயக்கப்படுகின்றன. 
இதுதவிர, போர்ட் மொபிலிட்டி தயாரித்த செயலி வழியாக சீருந்து இணைப்பு சேவைகள், 6 மெட்ரோ ரயில் நிலையங்களில் செயல்படுத்தப்படுகின்றன. இந்த இணைப்பு சேவைகள், ஒவ்வொரு ரயில் நிலையங்களில் இருந்து 6 கி.மீ. முதல் 8 கி.மீ. வரை செயல்படுத்தப்படுகின்றன. இதற்காக ரூ.10 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. 
இந்நிலையில், பயணிகளின் வசதிக்காக இந்த சேவையை விரிவுப்படுத்தும் நோக்கில், மெட்ரோ ரயில் நிலையங்களில் கூடுதலாக 20 சீருந்து சேவைகளை விரைவில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்து மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரி ஒருவர்  கூறியது: ஏற்கெனவே 6 நிலையங்களில் 12 சீருந்து  சேவை செயல்பட்டு வருகிறது. தற்போது இந்த சேவையை விரிவுபடுத்தும் நோக்கில், பெங்களூரில் இருந்து கூடுதலாக 20 சீருந்துகள் கொண்டு வரப்பட்டுள்ளன. 
ஒரு நிலையத்துக்கும் 2 சீருந்துகள் வீதம் 10 மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு இந்த சீருந்துகளை வழங்கி, இந்தக் கூடுதல் சீருந்து சேவையை
விரைவில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்தச் சேவைக்கு மக்கள் மத்தியில் கிடைக்கும் வரவேற்பைப் பொருத்து, மீதமுள்ள மற்ற மெட்ரோ ரயில் நிலையங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com