அக்.2 முதல் சென்னையில் 5 நாள்களுக்கு நாடக விழா

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கமும், கேரள சமாஜமும் இணைந்து அக்டோபர் 2 முதல் 6-ஆம் தேதி வரை தென்னிந்திய மக்கள் நாடக விழாவை நடத்த உள்ளன.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கமும், கேரள சமாஜமும் இணைந்து அக்டோபர் 2 முதல் 6-ஆம் தேதி வரை தென்னிந்திய மக்கள் நாடக விழாவை நடத்த உள்ளன.
சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் வெள்ளிக்கிழமை நாடக விழாக் குழு தலைவர் நடிகை ரோஹினி, விழாக்குழு செயலாளர் பிரளயன், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்கப் பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சண்யா ஆகியோர் இணைந்து கூறியது: தென்னக பண்பாட்டு மையம், தஞ்சாவூர் கலை பண்பாட்டு துறை, தமிழக அரசு ஆகியவற்றின் ஆதரவு நாடகவிழா அக்டோபர் 2 முதல் 6-ஆம் வரை தேதி பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள நேரு பூங்கா எதிரில் உள்ள கேரள சமாஜம் வளாகத்தில் நடைபெறும். மக்களது அறம் சார்ந்த கேள்விகளை லட்சியங்களை வலியுறுத்தும் நாடக விழாவாக இது இருக்கும்.
அக்டோபர் 2-இல் விழாவை இசைக்கலைஞர் டி.எம்.கிருஷ்ணா தொடங்கி வைக்கிறார். அமைச்சர் பாண்டியராஜன், திரைக்கலைஞர்கள் சச்சு, நாசர் இயக்குநர் பா.ரஞ்சித், ராஜூ முருகன், லெனின் பாரதி, நாடாளுமன்ற உறுப்பினர் பழநிமாணிக்கம், தொழிலதிபர் நல்லி குப்புசாமி, நக்கீரன் கோபால் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
தமிழகத்தின் முன்னணி நாடகக் குழுக்களான கூத்துப்பட்டறை, சென்னைக் கலைக்குழு, மரப்பாச்சி, பெர்ச், ஷரத்தா, ஸ்டேஜ் ஃப்ரண்ட்ஸ், மணல்மகுடி உள்பட 32-க்கும் மேற்பட்ட நாடகக் குழுக்கள், 500-க்கும் மேற்பட்ட கலைஞர்கள், 5 மொழிகளில் 5 முழுநாள்களும் நாடகங்களை நிகழ்த்த உள்ளனர். நடிகர்கள் நாசர், ரோஹிணி, கலைராணி, விமல், குருசோமசுந்தரம், குமரவேல், வேல ராமமூர்த்தி ஆகியோர் பங்கேற்கும் ஓராள் நாடகங்களும் நடக்க உள்ளன. காலை 10 மணிக்கு முதல் இரவு 9 மணி வரை நாடகங்கள் நடக்கும். அனுமதி இலவசம் என்று தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com