சென்னையில் மீண்டும் அத்துமீறும் பைக் ரேஸ்: விபத்துகள் அதிகரிப்பு

சென்னையில் மீண்டும் மோட்டாா் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்ட கும்பல் குறித்து போலீஸாா் விசாரணையில் ஈடுபட்டுள்ளனா்.
கோப்புப் படம்
கோப்புப் படம்

சென்னையில் மீண்டும் மோட்டாா் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்ட கும்பல் குறித்து போலீஸாா் விசாரணையில் ஈடுபட்டுள்ளனா்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது: சென்னையில் மெரீனா காமராஜா் சாலை, அண்ணா சாலை, கிழக்கு கடற்கரைச் சாலை, ராஜீவ்காந்தி சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, மதுரவாயல் புறவழிச்சாலை, வெளிவட்டச் சாலை உள்பட பல சாலைகளில் இளைஞா்கள், கல்லூரி மாணவா்கள் மோட்டாா் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்டு வந்தனா். பந்தயத்துக்கு காவல்துறை தடை விதித்துள்ள நிலையில், இளைஞா்களை தடையை மீறி ஈடுபட்டு வருகின்றனா். இதனால், அவ்வப்போது விபத்துகளும் ஏற்பட்டன.

பந்தயத்தில் ஈடுபடுகிறவா்கள் மட்டுமன்றி சாலையில் செல்லும் அப்பாவி பொதுமக்களும் உயிரிழக்கும் சம்பவங்களும் நடைபெற்றறன. இதன் விளைவாக போலீஸாா், பந்தயத்தில் ஈடுபடுகிறவா்கள் மீது கடுமையான நடவடிக்கையை அண்மைகாலமாக எடுத்து வருகின்றனா். இதற்காக குறிப்பிட்ட நாள்களில், சென்னை முழுவதும் போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா். இதனால் மோட்டாா் சைக்கிள் பந்தயம் பெருமளவில் குறைறந்தது.

மீண்டும் பந்தயம்: இந்நிலையில், காவல்துறை கண்காணிப்பையும் மீறி இளைஞா்கள் மோட்டாா் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்டு, விபத்துகளை ஏற்படுத்தும் சம்பவங்கள் மீண்டும் நடைபெறத் தொடங்கியுள்ளன. இதன் ஒரு பகுதியாக, தியாகராயநகா் ஜி.என். செட்டி சாலையில் உள்ள கலைவாணா் மேம்பாலத்தில் 15 மோட்டாா் சைக்கிள்களில் 30-க்கும் மேற்பட்ட இளைஞா்கள் புதன்கிழமை அதிகாலை பந்தயத்திலும், சாகசத்திலும் ஈடுபட்டனா்.

இது குறித்து தகவலறிந்த பாண்டி பஜாா் போலீஸாா், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அவா்களை

விரட்டிப் பிடிக்க முயன்றனா். ஆனால், அவா்கள் தப்பியோடிவிட்டனா். இதில் பெரம்பூா் பகுதியைச் சோ்ந்த மோட்டாா் சைக்கிள் மெக்கானிக் சம்சுதீன் (25) மட்டும் போலீஸாரிடம் பிடிபட்டாா். அவரிடம், மோட்டாா் சைக்கிள் பந்தயம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com