மேற்கூரை விழுந்து சிறுவன் உயிரிழந்த விவகாரம்: உயர்நீதிமன்றத்தில் முறையீடு

சென்னை பாரிமுனையில் வீட்டின் மேற்கூரை விழுந்து சிறுவன் பலியான விவகாரம் குறித்து உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுக்க கோரி உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. 

சென்னை பாரிமுனையில் வீட்டின் மேற்கூரை விழுந்து சிறுவன் பலியான விவகாரம் குறித்து உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுக்க கோரி உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. 

சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், என்.சேஷசாயி ஆகியோர் அடங்கிய அமர்வு வெள்ளிக்கிழமை வழக்குகளை விசாரித்து வந்தனர். 

அப்போது ஆஜரான சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி, பாரிமுனை சண்முகராயன் தெருவில் இந்துசமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான பழைமையான குடியிருப்புகள் உள்ளன. கடந்த புதன்கிழமையன்று இரவு பெய்த கனமழையின் காரணமாக சுரேஷ் என்பவரது வீட்டின் மேற்கூரை இடிந்து கீழே விழுந்தது. 

இந்த விபத்தில் சுரேஷின் 8 வயது மகன் உயிரிழந்தார். ஏற்கெனவே உயர்நீதிமன்றம் பராமரிப்பு இல்லாத ஆபத்தான பழைமையான கட்டடங்களை இடிக்க மாநகராட்சிக்கு உத்தரவிட்டிருந்தது. ஆனால் அந்த உத்தரவை அமல்படுத்தாத காரணத்தால்தான் சிறுவன் உயிரிழந்துள்ளான். 

எனவே இந்த விவகாரம் குறித்து உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். 

இதுகுறித்து மனுவாக தாக்கல் செய்தால் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com