Enable Javscript for better performance
தண்டவாள பராமரிப்புப் பணி: நாளை ரயில் சேவையில் மாற்றம்- Dinamani

சுடச்சுட

    

    தண்டவாள பராமரிப்புப் பணி: நாளை ரயில் சேவையில் மாற்றம்

    By DIN  |   Published on : 29th September 2019 05:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

     

    சென்னை எழும்பூர்-விழுப்புரம் பிரிவில், காட்டாங்குளத்தூர்-சிங்கபெருமாள்கோவில் இடையே தண்டவாள பராமரிப்புப் பணி நடக்கவுள்ளதால், திங்கள்கிழமை(செப்.30) ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படவுள்ளது.

    செப்.30-ஆம் தேதி மாற்றம் செய்யப்படும் ரயில்கள்:  சென்னை கடற்கரை-அரக்கோணத்துக்கு செப்டம்பர் 30-ஆம் தேதி காலை 9.20 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் கூடுவாஞ்சேரி-அரக்கோணம் இடையே பகுதி ரத்து செய்யப்படவுள்ளது.

    சென்னை கடற்கரை-செங்கல்பட்டுக்கு காலை 9.32, 10.56 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் தாம்பரம்-செங்கல்பட்டு இடையே பகுதி ரத்து செய்யப்படவுள்ளன. 

    சென்னை கடற்கரை-செங்கல்பட்டுக்கு காலை 10.08, முற்பகல் 11.48 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில் கூடுவாஞ்சேரி-செங்கல்பட்டு இடையே பகுதி ரத்து செய்யப்படவுள்ளன.  செங்கல்பட்டு -சென்னை கடற்கரைக்கு காலை 10.55, நண்பகல் 12.20 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் செங்கல்பட்டு-தாம்பரம் இடையே பகுதி ரத்து செய்யப்படவுள்ளன. செங்கல்பட்டு-சென்னை கடற்கரைக்கு முற்பகல் 11.30, மதியம் 1 ஆகிய நேரங்களில்  இயக்கப்படும் மின்சார ரயில்கள் செங்கல்பட்டு-கூடுவாஞ்சேரி இடையே பகுதி ரத்து செய்யப்படவுள்ளன. 

    சிறப்பு ரயில்கள்: பயணிகள் வசதிக்காக செப்டம்பர் 30-ஆம் தேதி சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. சென்னை கடற்கரை-அரக்கோணத்துக்கு செப்டம்பர் 30-ஆம்தேதி  நண்பகல் 12.45 மணிக்கு பயணிகள் சிறப்பு ரயில் 
    இயக்கப்படவுள்ளது. இதுதவிர, சென்னை கடற்கரை-செங்கல்பட்டுக்கு செப்டம்பர் 30-ஆம் தேதி மதியம் 1 மணிக்கு பயணிகள் சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai