Enable Javscript for better performance
முதல் அரையாண்டுக்கான தொழில் வரி: நாளைக்குள் செலுத்த அறிவுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    முதல் அரையாண்டுக்கான தொழில் வரி: நாளைக்குள் செலுத்த அறிவுறுத்தல்

    By DIN  |   Published on : 29th September 2019 05:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பெருநகர சென்னை மாநகராட்சியின் முதல் அரையாண்டுக்கான தொழில் வரியை திங்கள்கிழமைக்குள் (செப். 30) செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் அலுவலகம் வெளியிட்ட செய்தி:
    சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மத்திய,  மாநில,  பிற அரசுத் துறை சார்ந்த அலுவலர்கள்,   தனியார் நிறுவன ஊழியர்கள், தொழில் புரிவோர், வணிகர்கள் ஆகியோரிடமிருந்து ஆறு மாதத்துக்கு ஒருமுறை தொழில் வரி வசூலிக்கப்படுகிறது. 2019-2020 நிதி ஆண்டுக்கான முதலாம் அரையாண்டு தொழில்வரியை  திங்கள்கிழமைக்குள் (செப். 30) செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தவறும்பட்சத்தில் அபராதம் மற்றும் வட்டித் தொகை கணக்கீடு செய்து வசூலிக்கப்படும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai