உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்ற மாநாடு: புதிய உறுப்பினர்கள் தேர்வு

அமெரிக்காவில் சிகாகோ நகரில் அண்மையில் நடைபெற்ற உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்தின் 10-ஆவது மாநாட்டில் புதிய மையக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 

அமெரிக்காவில் சிகாகோ நகரில் அண்மையில் நடைபெற்ற உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்தின் 10-ஆவது மாநாட்டில் புதிய மையக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 
இது குறித்து உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத் தலைவர் மு.பொன்னவைக்கோ வெளியிட்டுள்ள அறிக்கை:
சிகாகோ நகரில் அண்மையில் நடைபெற்ற உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்தின் மாநாட்டில் பொதுக்குழுக்கூட்டம் நடைபெற்றது. அன்றைய தலைவர் டத்தோ ஸ்ரீ மாரிமுத்து தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் புதிய
தலைவராக மு.பொன்னவைக்கோ, துணைத் தலைவர்களாக  இ.சுந்தரமூர்த்தி- இந்தியா, பிரான்சிஸ் சவரி முத்து- அமெரிக்கா, சிவா பிள்ளை- ஐரோப்பா ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டனர்.
பொதுச்செயலர்களாக உலகநாயகி பழனி- இந்தியா, அரசர் அருளாளர்- அமெரிக்கா, ஏ.சண்முகதாஸ்- இலங்கை ஆகியோரும்,  பொருளாளர்களாக தாமோதரன்- இந்தியா, பால் பாண்டியன்-அமெரிக்கா , ஒருங்கிணைப்பாளராக ப.மருதநாயகம்- இந்தியா, இணையதளத் தொடர்பு உதவியாளர்களாக சரவணகுமார் மணி- அமெரிக்கா, இரவி பாலா- அமெரிக்கா, மு .இளங்கோவன்- புதுச்சேரி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com