ராணுவப் பணியால் 19 ஊர்களுக்கு மாறினோம்: அபிநந்தனின் தாயார் ஷோபா வர்தமான் பேச்சு

தனது குடும்பத்தினரின் ராணுவப் பணியால் 19 ஊர்களுக்கு இடம்மாறியதாக இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தனின் தாயார் டாக்டர் ஷோபா வர்தமான் கூறினார். 
தனது குடும்பத்தினரின் ராணுவப் பணியால் 19 ஊர்களுக்கு இடம்மாறியதாக இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தனின் தாயார் டாக்டர் ஷோபா வர்தமான் கூறினார். 
தனது குடும்பத்தினரின் ராணுவப் பணியால் 19 ஊர்களுக்கு இடம்மாறியதாக இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தனின் தாயார் டாக்டர் ஷோபா வர்தமான் கூறினார். 

தனது குடும்பத்தினரின் ராணுவப் பணியால் 19 ஊர்களுக்கு இடம்மாறியதாக இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தனின் தாயார் டாக்டர் ஷோபா வர்தமான் கூறினார். 
எஸ் பவுண்டேசன் சார்பில் இந்திய ராணுவ வீரர்களின் தியாகத்தை நினைவுகூரும் வகையில் "மறத்தல் தகுமோ' என்ற தலைப்பில் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டியின் இறுதி சுற்றும், வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசளிப்பு விழாவும் சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் கெளரவிக்கப்பட்ட இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தனின் தாயார் டாக்டர் ஷோபா வர்தமான் பேசியது:
பொதுவாக ராணுவ அதிகாரிகள், வீரர்கள் அடிக்கடி இடமாற்றம் செய்யப்படுவது வழக்கம். இந்த சமயங்களில் பள்ளிகளில் படிக்கின்ற ராணுவ வீரர்களின் குழந்தைகளும் இடமாறுவர். அபிநந்தன் பள்ளி படிப்பை முடிப்பதற்குள் இந்தியாவில் உள்ள 19 இடங்களுக்கு இடம் மாறினோம். இதுபோன்ற இடமாற்றங்கள் தான் பல்வேறு மொழிகளையும், கலாசாரங்களையும், பண்பாடுகளையும் கற்றுக்கொள்ள வாய்ப்பாக இருந்தது. மேலும் இந்த 
படிப்பினைகள் குடும்பத்தில் நிலவும் பிரச்னைகளைக் கையாள ஏதுவாக அமைந்தன. நான் ராணுவ வீரரின் மருமகளாக, மனைவியாக, தாயாக இருந்துள்ளேன். இந்த நிகழ்வில் கலந்துகொண்டு ராணுவ வீரர்களின் பெருமைகளையும், தியாகத்தையும் குறித்து பேசுவதோடு மட்டும் நின்று விடக்கூôடது. இளம் தலைமுறையினர் ராணுவ வீரரை திருமணம் செய்து கொள்வதையும், அவர்களின் குழந்தைகளாக இருப்பதையும் பெருமையாகக் கருத வேண்டும். தேசிய கீதம் பாடும்போது எழுந்து நிற்பது குறித்து சிலர் விமர்சனம் செய்தனர். ஆனால் நீங்கள் எப்போது தேசிய கீதத்தைப் பாடினாலும் அதை  உங்கள் மனத்தில் இருந்து பாடுங்கள் என்றார் அவர் .
ராணுவ அதிகாரிகள் பயிற்சி அகாதெமியின் பயிற்றுநர் மேஜர் ஜெனரல் ஏ.அருண் பேசியது:
ஒரு ஊரில் நுழையும் புதிய நபர்களை அவர்களின் வாசனையைக் கொண்டு கண்டறிபவர்கள் ராணுவ வீரர்கள். இதுபோன்ற பல்வேறு உத்திகளைக் கொண்டுதான் எல்லையோர கிராமங்களில் நுழையும் தீவிரவாதிகளை ராணுவ வீரர்கள் கண்டுபிடிப்பார்கள். எனவே உள்ளூர் ராணுவ அதிகாரிகள் மற்றும் ராணுவ வீரர்களை அந்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் நம்ப வேண்டும். போர் சமயங்களில் ராணுவ வீரர்களின் உடலில் சிறு துளையிட்டு பாயும் குண்டுகள் 
உள்ளே வெடித்துச் சிதறி, வெளியேறும் போது பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும். உலகிலேயே ராணுவ வீரராக இருப்பதே சிறந்த பணி. ராணுவ வீரர்கள் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தார்கள் என்பதைவிட அவர்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்பதுதான் கவனிக்கப்படும் என்றார் அவர்.
இந்த விழாவில் கார்கில் போரில் உயிரிழந்த கேப்டன் விஜயந்த் தாப்பரின் தந்தை வி.என்.தாப்பர், அவரது மனைவி திரிப்தா தாப்பர் மற்றும் இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தனின் தந்தை ஏர் மார்ஷல் சிம்ஹகுட்டி வர்தமான், அவரது மனைவி டாக்டர் ஷோபா வர்தமான் ஆகியோருக்கு நினைவுப்பரிசு வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.
முன்னதாக கார்கில் 20 ஆண்டுகள் வெற்றிகளும், காயங்களும் என்னும் தலைப்பில் நடைபெற்ற பேச்சுப் போட்டிக்கு பத்மஸ்ரீ விருது பெற்ற கர்நாடக இசைக்கலைஞர் அருணா சாய்ராம், பத்திரிகையாளர் திருப்பூர் கிருஷ்ணன் உள்ளிட்டோர் நீதிபதிகளாக இருந்து வெற்றி பெற்றவர்களை தேர்வு செய்தனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியை எஸ் பவுண்டேசனின் நிறுவன அறங்காவலர்கள் வழக்குரைஞர்கள் கே.சுமதி, ஆர்.சங்கரநாராயணன் மற்றும் சிம்ஹாஞ்சனா உள்ளிட்டோர் ஏற்பாடு செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com