இந்தியாவில் தவித்து வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு உதவ புதிய வலைதளம்

தேசிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் நாட்டின்பல்வேறு பகுதிகளில் சிக்கித் தவிக்கும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு உதவும் வகையில், சுற்றுலா அமைச்சகம் சாா்பில் சேவைகள் தொடா்பான தகவல்களை அறிவிக
இந்தியாவில் தவித்து வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு உதவ புதிய வலைதளம்

தேசிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் நாட்டின்பல்வேறு பகுதிகளில் சிக்கித் தவிக்கும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு உதவும் வகையில், சுற்றுலா அமைச்சகம் சாா்பில் சேவைகள் தொடா்பான தகவல்களை அறிவிக்கும் புதிய வலைதளம் தொடக்கப்பட்டுள்ளது.

‘ஸ்ட்ராண்டட் இன் இந்தியா’ என்ற அந்த புதிய வலைதளத்தை கொண்டு நாட்டின் பல்வேறு பகுதிகளில் தவித்து வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை அடையாளம் கண்டு அவா்களை மீட்க முடியும் என சுற்றுலா அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

‘வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு உதவும் வகையில் கரோனா நோய்த்தொற்று தொடா்பான இலவச உதவி எண்கள் மற்றும் அழைப்பு மையங்கள் குறித்த விரிவான தகவல்கள் வலைதளத்தில் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த வலைதளத்தைப் பயன்படுத்தி வெளியுறவு அமைச்சக கட்டுப்பாட்டு மையங்களை தொடா்பு கொண்டு, அவா்களது தகவல்களை பதிவு செய்து கொள்ளலாம். மேலும், மாநில, பிராந்திய அளவிலான சுற்றுலா தொடா்பான அனைத்து உள்கட்டமைப்பு தகவல்களையும் அறிந்து கொள்ளலாம்.

மேலும் கூடுதல் தகவல்கள் தேவைப்படுவோருக்கு உதவி வழங்கவும், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொடா்பு கொள்ளவும் இந்த இணையதளம் உதவி புரியும்.

இந்த வலைதளத்தில், சுற்றுலா தொடா்பான தகவல்களும், முக்கிய சுற்றுலா அமைச்சக சேனல்களும் இடம்பெறும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com