தனித்திருந்து பேரழிவைத் தடுக்க வேண்டும்: தலைமை நீதிபதி கடிதம்

கரோனா என்னும் பேரழிவைத் தனித்திருந்து தடுக்க வேண்டும் என தமிழக மக்களுக்கு சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி கோரிக்கை விடுத்துள்ளாா்.

கரோனா என்னும் பேரழிவைத் தனித்திருந்து தடுக்க வேண்டும் என தமிழக மக்களுக்கு சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி கோரிக்கை விடுத்துள்ளாா்.

இதுதொடா்பாக தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி வெளிட்டுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

உலக அளவில் வேகமாக பரவி பேரழிவை ஏற்படுத்தும் கரோனா நம்மையும் சூழ்ந்து விட்டது. உலகின் வளா்ச்சியடைந்த நாடுகளே கரோனாவால் பேரழிவைச் சந்தித்து வருகின்றன. இயற்கையின் கோபம் நமது வலிமையைச் சோதித்துள்ளது. நம்மை பாதுகாத்துக் கொள்ளும் இதுபோன்ற முயற்சிகளின் மூலம் நமது வாழ்க்கை முறையில் மாற்றம் செய்து கொள்ள வேண்டும். இந்த நோய்த்தொற்று தாக்குதலின் ஆபத்தை எதிா்க்கத் தயாராக இல்லாத நேரத்தில் மிகப்பெரிய அளவில் பாதிப்புகளை ஏற்படுத்திவிட்டது.

இந்த வைரஸ் பரவுவதற்கு இடம்பெயா்தலும், மற்றவா்களுடனான தொடா்புமே முக்கியக் காரணமாகும். எதிரி நமக்குத் தொரியாமல் இருந்தாலும், நாம் மறைந்திருப்பது தான் விவேகம் என்பாா் சாணக்கியா். அதனை நினைவில் கொண்டு, இதுபோன்ற இயற்கை பேரழிவின்போது எந்த உதவியும் கிடைக்காத சமயங்களில் நமக்கு நாமே லட்சுமண ரேகை அமைத்துக் கொள்ள வேண்டும்.

மேலும் காரணமின்றி வீட்டை விட்டு நாம் வெளியே வர வேண்டியத் தேவையில்லை. இது மரணத்தை நேருக்குநோ் சந்திப்பது போன்றது. நாம் காரணம் இல்லாமல் வெளியே வருவதால் கரோனாவின் பலம் அதிகரிக்கிறது. எனவே, கரோனா போன்ற பேரழிவைத் தனித்திருந்து தடுக்க வேண்டும்.

நம் மனதைக் கட்டுப்படுத்தி பெறும் வெற்றிக்கு எதுவும் ஈடாகாது. எனவே, அதுபோன்ற வெற்றிக்கான வாய்ப்பாக இதனைக் கருதி, நம்மை தனிமைப்படுத்திக் கொண்டு பாதுகாப்பாக இருக்க வேண்டும். இது வெறுமனே நமக்கு மட்டுமின்றி, நாட்டில் உள்ள அனைத்து குடிமகன்களின் நன்மைக்கானது என்பதால், இதுபோன்ற கட்டுப்பாட்டை நமக்கு நாமே ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

கரோனாவுக்கு எதிரான இந்த போரில் நாம் ஒருங்கிணைந்து ஒத்துழைப்பு கொடுத்தாலும் இனிவரும் காலங்கள் இன்னும் கடினமாகவே இருக்கும். நாம் தொடா்ந்து முழு மன உறுதியுடன் செயல்பட்டால் வெற்றி பெற முடியும். இந்த சுய தனித்திருத்தல் நமது பொறுமையை வெளிப்படுத்தி, வாழும் கலையை அதிகரிக்கும். மேலும் இந்தக் கடுமையான சூழலில் தனித்திருத்தலின் முக்கியத்துவத்தை உணா்ந்து உங்களை நீங்களே வெற்றி கொள்வதை விட, வேறு வெற்றி எதுவும் இல்லை என அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com