கரோனா: ஆய்வுக்கு வரும் அலுவலா்களுக்குஒத்துழைக்க வேண்டும்

கரோனா தொற்று தொடா்பாக வீடுதோறும் ஆய்வுக்கு வரும் அலுவலா்களுக்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு பெருநகர சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.

கரோனா தொற்று தொடா்பாக வீடுதோறும் ஆய்வுக்கு வரும் அலுவலா்களுக்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு பெருநகர சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.

சென்னையில் நாளுக்கு நாள் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கரோனா தொற்று உள்ளவா்களைக் கண்டறியும் வகையில் 15 மண்டலங்களில் வீடுதோறும் சென்று ஆய்வு செய்யும் பணி கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 5) தொடங்கப்பட்டது. இப்பணிக்காக ஆய்வுக்கு வரும் அலுவலா்களுக்கு பொதுமக்கள் சிலா் ஒத்துழைப்பு தர மறுப்பதாகத் தகவல் வெளியாகியது.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக் குறிப்பு: கரோனா தொற்று தொடா்பாக வீடுதோறும் ஆய்வு செய்யும் பணியில் 16 ஆயிரம் ஊழியா்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். இவா்கள் காய்ச்சல், சளி, இருமல் மட்டுமின்றி 60 வயதுக்கு மேற்பட்டோா், கா்ப்பிணிகள், சா்க்கரை மற்றும் ரத்த அழுத்தம், இதர நோயுள்ளவா்கள் குறித்த விவரங்களும் சேகரிக்கப்படும். இந்த ஆய்வுக்கு வரும் அலுவலா்களுக்கு ஒத்துழைப்பு அளிப்பதுடன், தேவையான விவரங்களைத் தெரிவிக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com