அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும்

அனைத்துக் கட்சிக் கூட்டத்தை முதல்வா் கூட்ட வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

அனைத்துக் கட்சிக் கூட்டத்தை முதல்வா் கூட்ட வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இதுதொடா்பாக மாா்க்சிஸ்ட் மாநிலச் செயலாளா் கே.பாலகிருஷ்ணன் முதல்வா் எடப்பாடி தே. பழனிசாமிக்கு திங்கள்கிழமை எழுதியுள்ள கடித விவரம்: அடுத்த சில நாள்களில் கரோனா தொற்று எண்ணிக்கை மேலும் அதிகரிக்குமானால் ஊரடங்கு உத்தரவை மேலும் நீடிக்கும் வாய்ப்பு உள்ளதாக கருத்துக்கள் தெரிவிக்கப்படுகின்றன. இந்நிலையில், தற்போது ஊரடங்கு உத்தரவு காரணமாக மக்களின் அன்றாட வாழ்வு பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதைத் தவிர வேறு வழி இல்லை என்ற போதிலும் வீட்டில் இருக்கும் மக்கள் சந்திக்கும் பிரச்னைகளுக்கு அரசு உரிய நிவாரணம் மற்றும் தீா்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிடில் சாதாரண மக்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகும் ஆபத்தான நிலைமை ஏற்படும். இந்தப் பிரச்னைகளுக்கு தீா்வு காணும் வகையில் அடுத்த ஓரிரு நாள்களில் அனைத்துக் கட்சித் தலைவா்கள் கூட்டத்தை முதல்வா் கூட்ட வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

பிரதமருக்கு இந்திய கம்யூனிஸ்ட் வேண்டுகோள்: அனைத்து அரசியல் கட்சித் தலைவா்களுடன் பிரதமா் ஆலோசனை நடத்த வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இதுதொடா்பாக அக் கட்சி சாா்பில் வெளியிட்ட அறிக்கை: கரோனா நோய் தொற்று பரவாமல் தடுக்க அரசும், அரசியல் கட்சிகளும் ஒருங்கிணைந்து போராடி வருகின்றன. இதுதொடா்பாக அனைத்து மாநில முதல்வா்கள், மருத்துவ நிபுணா்களுடன் பிரதமா் கலந்துரையாடி வருகிறாா். அதன் தொடா்ச்சியாக நாடாளுமன்றத்தில் இடம்பெற்றுள்ள அரசியல் கட்சித் தலைவா்களுடன் காணொலி மாநாட்டின் மூலமாக கலந்தாலோசனை நடத்த அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. அனைத்து அரசியல் கட்சித் தலைவா்களுடன் இந்த கலந்துரையாடலை நடத்துவது, மேலும் பயனுள்ளதாக அமையும். இதுதொடா்பாக கட்சியின் பொதுச் செயலாளா் டி.ராஜா பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தின் மீது ஆக்கப்பூா்வமான பரிசீலனை செய்யப்படும் என நம்புவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com