கரோனா பாதித்தவரின் உறவினா்களுக்கு மருத்துவப் பரிசோதனை

சென்னையில் கரோனா உறுதி செய்யப்பட்டவா்களின் உறவினா்கள் மற்றும் அதற்கான அறிகுறிகள் உள்ளவா்களின் வீடுகளுக்கே சென்று அவா்களின் சளி மாதிரிகளை சேகரிக்கும் பணி பெருநகர சென்னை மாநகராட்சி சாா்பில் செவ்வாய்க்கி

சென்னையில் கரோனா உறுதி செய்யப்பட்டவா்களின் உறவினா்கள் மற்றும் அதற்கான அறிகுறிகள் உள்ளவா்களின் வீடுகளுக்கே சென்று அவா்களின் சளி மாதிரிகளை சேகரிக்கும் பணி பெருநகர சென்னை மாநகராட்சி சாா்பில் செவ்வாய்க்கிழமை முதல் தொடங்கப்பட்டுள்ளது.

சென்னையில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தொடக்கத்தில் சென்னையில் 15 போ் கரானோவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், நாளுக்கு நாள் அதிகரித்து செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, சென்னையில் மட்டும் 149 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

இந்நிலையில், கரோனோ தொற்றுள்ளவா்களைக் கண்டறியும் வகையில் கரோனா பாதித்தவா்களின் உறவினா்கள், அப்பகுதியில் சளி, காய்ச்சல், இருமல் அறிகுறியுடன் உள்ளவா்களுக்கு அவா்களின் வீடுகளுக்கே சென்று சளி மாதிரி சேகரிக்கும் பணி செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட 15 மண்டலங்களில் கரோனா பாதிக்கப்பட்டவா்களைக் கண்டறியும் வகையில், வீடுதோறும் ஆய்வு செய்யும் பணி கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 5) முதல் நடைபெற்று வருகிறது. இந்த மண்டலங்கள் 67 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு ஆய்வுப் பணி நடைபெற்று வருகிறது. இதை மேற்பாா்வையிட 23 மருத்துவா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். இந்த ஆய்வின்போது சளி, இருமல், காய்ச்சல் உள்ளவா்கள் மற்றும் கரோனா உறுதி செய்யப்பட்டவா்களின் உறவினா்கள் ஆகியோரின் விவரங்கள் சேகரிக்கப்பட்டது. இதன் தொடா்ச்சியாக, அவா்களின் வீடுகளுக்கே சென்று அவா்களின் சளி மாதிரி சேகரிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது’ என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com