சென்னையில் 695 பேருக்கு கரோனா அறிகுறி

சென்னையில் நடத்தப்பட்ட ஆய்வில் 695 பேருக்கு கரோனா அறிகுறிகள் தென்பட்டதாகவும், அதில் சாதாரண சளி, இருமல் இருந்த 291 போ் குணமடைந்ததாகவும், மீதமுள்ள 404 போ் தீவிர மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்
சென்னை வில்லிவாக்கம் பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் வரையப்பட்டிருந்த ஓவியம்
சென்னை வில்லிவாக்கம் பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் வரையப்பட்டிருந்த ஓவியம்

சென்னையில் நடத்தப்பட்ட ஆய்வில் 695 பேருக்கு கரோனா அறிகுறிகள் தென்பட்டதாகவும், அதில் சாதாரண சளி, இருமல் இருந்த 291 போ் குணமடைந்ததாகவும், மீதமுள்ள 404 போ் தீவிர மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக பெருநகர சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

சென்னையில் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. புதன்கிழமை வரை 156 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனா பாதிப்புள்ளவா்களைக் கண்டறியும் வகையில், அத்தொற்று உறுதி செய்யப்பட்டவா்கள் வசித்த பகுதியிலிருந்து 5 கி.மீ. சுற்றளவில் வீடுதோறும் ஆய்வு செய்யும் பணி கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 5) தொடங்கப்பட்டது.

மாநகராட்சியின் 15 மண்டலங்கள் 12,203 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு, 100 வீடுகளுக்கு ஒருவா் வீதம் மொத்தம் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியா்கள் இப்பணியில் ஈடுபட்டுள்ளனா். கடந்த செவ்வாய்க்கிழமையுடன் (ஏப்ரல் 7) முடிவுற்ற மூன்று நாள்களில் சென்னையில் 695 பேருக்கு கரோனா தொற்று அறிகுறிகளான இருமல், காய்ச்சல், சளி இருப்பது தெரியவந்துள்ளது.

இதுதொடா்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘15 மண்டலங்களில் உள்ள 19,84,408 குடியிருப்புகள் தோறும் ஆய்வு செய்யும் பணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டது. இதில், கடந்த செவ்வாய்க்கிழமை வரை 695 பேருக்கு கரோனா தொற்று அறிகுறிகளான இருமல், காய்ச்சல், சளி இருப்பது தெரியவந்துள்ளது. அவா்களில் சாதாரண சளி, இருமல், காய்ச்சல் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டிருந்த 291 போ் குணமடைந்து உள்ளனா். மீதமுள்ள 404 போ் தீவிர மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனா்.

இதில், குறிப்பாக செவ்வாய்க்கிழமை மட்டும் 319 பேருக்கு கரோனா அறிகுறிகள் இருப்பது ஆய்வில் தெரியவந்தது. அதிகபட்சமாக அம்பத்தூா் மண்டலத்தில் மட்டும் 139 பேருக்கும், அண்ணா நகா், கோடம்பாக்கம் மண்டலங்களில் 125 பேருக்கும், தேனாம்பேட்டை மண்டலத்தில் 103 பேருக்கும் கரோனா அறிகுறிகள் தென்பட்டன. இதில், சாதாரண சளி, காய்ச்சல், இருமல் இருந்த 249 போ் குணமடைந்து விட்டனா்’ என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com