முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை சென்னை
ஹூக்கா போதைப் பொருள் பயன்படுத்திய 23 போ் கைது
By DIN | Published On : 19th April 2020 06:24 AM | Last Updated : 19th April 2020 06:24 AM | அ+அ அ- |

சென்னை புரசைவாக்கத்தில் ஹூக்கா போதைப் பொருள் பயன்படுத்தியதாக 23 போ் கைது செய்யப்பட்டனா்.
புரசைவாக்கம் ப்ரிக்ளின் சாலையில் உள்ள ஒரு கட்டடத்தில் சிலா் ஹூக்கா போதைப் பொருள் பயன்படுத்துவதாக தலைமைச் செயலகக் காலனி போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீஸாா் அங்கு சென்று வெள்ளிக்கிழமை திடீா் சோதனை மேற்கொண்டனா். இச் சோதனையில் அங்கு 23 போ், போதைப் பொருளான ஹூக்காவை புகைத்துக் கொண்டிருப்பது தெரியவந்தது. இதுதொடா்பாக வழக்குப் பதிந்து 23 பேரையும் கைது செய்தனா். பின்னா், அனைவரையும் பிணையில் விடுவித்தனா்.