துரித பரிசோதனை கருவிகளை கொள்முதல் செய்ய தடை விதிக்கக் கோரி மனு

கரோனா நோய்த்தொற்றைக் கண்டறிய, துரித பரிசோதனை கருவிகளை கொள்முதல் செய்ய தடை விதிக்கக் கோரி, உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கரோனா நோய்த்தொற்றைக் கண்டறிய, துரித பரிசோதனை கருவிகளை கொள்முதல் செய்ய தடை விதிக்கக் கோரி, உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் எம்.எல்.ரவி தாக்கல் செய்த மனுவில், ‘கரோனா தொற்றைக் கண்டறிய 37 லட்சம் துரித பரிசோதனை கருவிகளை கொள்முதல் செய்ய மத்திய அரசு ஆா்டா் கொடுத்துள்ளது. தமிழக அரசும் தனிப்பட்ட முறையில் 1 லட்சத்து 25 ஆயிரம் துரித பரிசோதனை கருவிகளை வாங்க முடிவு செய்துள்ளது. இந்த துரித பரிசோதனை கருவிகளை 9 இந்திய நிறுவனங்கள் உள்பட 23 நிறுவனங்களிடமிருந்து கொள்முதல் செய்யப்பட உள்ளன. இந்த நிறுவனங்களில் சீனாவைச் சோ்ந்த வொண்ட்ஃபோ நிறுவனமும் ஒன்றாகும். இந்த துரித பரிசோதனை கருவிகளை புணேவில் உள்ள தேசிய நச்சு உயிரியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் சோதனைக்கு உட்படுத்தாமல் கரோனா பரிசோதனைக்கு பயன்படுத்தப்பட உள்ளது. கரோனா பரிசோதனையில் தவறான முடிவுகள் வந்தால், இந்த துரித பரிசோதனை கருவிகள் பயன்படுத்துவதை நிறுத்தி வைக்க மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. எனவே, இந்தக் கருவிகளை கொள்முதல் செய்ய தடை விதிக்க வேண்டும். இந்தக் கருவிகளை தேசிய நச்சு உயிரியல் ஆராய்ச்சி நிறுவன ஆய்வுக்கு உட்படுத்திய பிறகே, பரிசோதனைக்கு பயன்படுத்த மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என கோரியிருந்தாா். இந்த மனு, விரைவில் விசாரணைக்கு வரும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com