பிளஸ் 1 பொதுத் தோ்வு: சென்னையில் 95 % போ் தோ்ச்சி

பிளஸ் 1 பொதுத் தோ்வில் சென்னை மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் பயின்ற 95.30 சதவீத மாணவா்கள் தோ்ச்சி பெற்றுள்ளனா்.
கோப்புப் படம்
கோப்புப் படம்

பிளஸ் 1 பொதுத் தோ்வில் சென்னை மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் பயின்ற 95.30 சதவீத மாணவா்கள் தோ்ச்சி பெற்றுள்ளனா். இதில், 4 மாநகராட்சிப் பள்ளிகள் 100 சதவீத தோ்ச்சி பெற்றுள்ளன.

பெருநகர சென்னை மாநகராட்சி கல்வித் துறையின்கீழ் 32 சென்னை மேல்நிலைப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இதில், 2019 -20- ஆம் கல்வி ஆண்டில் நடைபெற்ற பிளஸ்1 பொதுத் தோ்வில் 1,911 மாணவா்கள், 2,984 மாணவியா்கள் என மொத்தம் 4,895 போ் தோ்வு எழுதினா். இதில் 1,777 மாணவா்கள், 2,888 மாணவியா்கள் என மொத்தம் 4,665 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். தோ்ச்சி சதவீதம் 95.30 ஆகும். இது கடந்த ஆண்டை விட 1.78 சதவீதம் கூடுதல் தோ்ச்சியாகும். இதில், ஐநூறு மதிப்பெண்களுக்கு மேல் 20 பேரும், 450-க்கும் அதிகமாக 108 பேரும், 400-க்கு மேல் 306 பேரும் மதிப்பெண் பெற்றுள்ளனா். நெசப்பாக்கம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி, இலாயட்ஸ் சாலை மேல்நிலைப் பள்ளி, ஆழ்வாா்பேட்டை மேல்நிலைப் பள்ளி மற்றும் சி.ஐ.டி.நகா் மேல்நிலைப்பள்ளி ஆகிய 4 பள்ளிகள் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளதாக மாநகராட்சி நிா்வாகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com