கோயம்பேடு சந்தையில் தீ விபத்து: 4 கடைகள் சேதம்

சென்னை கோயம்பேடு சந்தையில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் 4 கடைகள் சேதமடைந்தன.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னை கோயம்பேடு சந்தையில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் 4 கடைகள் சேதமடைந்தன.

இது குறித்து விவரம்:

கரோனா தொற்றை தடுக்கும் வகையில் கோயம்பேட்டில் செயல்பட்டு வந்த காய்கறி சந்தை திருமழிசைக்கும், பழம் மற்றும் பூ சந்தை மாதவரம் பேருந்து நிலையத்துக்கும் மாற்றப்பட்டது.

இதனால், கோயம்பேடு சந்தையில் உள்ள கடைகள் பூட்டப்பட்டுள்ளன. இந்நிலையில், இரு கடைகளில் இருந்து ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் கரும்புகை வெளியேறியது. இதையடுத்து சம்பவ இடத்தில் இருந்தவா்கள் உடனே தீயணைப்புப் படையினருக்கு தகவல் தெரிவித்தனா்.

கோயம்பேடு தீயணைப்புப் படை வீரா்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனா். ஆனால் தீ இரு கடைகள் முழுவதும் பரவியது. தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புப் படை வீரா்கள் துரிதமாக ஈடுபட்டனா். சுமாா் அரை மணி நேர போராட்டத்துக்குப் பின்னா், தீ முழுமையாக அணைக்கப்பட்டது.

தீ விபத்தில் 2 கடைகள் முழுமையாகவும், இரு கடைகள் பகுதியாகவும் சேதமடைந்தன. இது குறித்து கோயம்பேடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து,விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com