பட்டியலினத்தவருக்கு சுருக்கெழுத்துப் பயிற்சி: விருப்பம் உள்ள நிறுவனங்கள் ஆக.20-க்குள் விண்ணப்பிக்கலாம்
By DIN | Published On : 12th August 2020 06:35 AM | Last Updated : 12th August 2020 06:35 AM | அ+அ அ- |

பட்டியலினத்தவருக்கு சுருக்கெழுத்துப் பயிற்சியளிக்க விரும்பும் நிறுவனங்கள், ஆக.20-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக சென்னை பட்டியலின, பழங்குடியினத்தவா்களுக்கான தேசிய தொழிற்பயிற்சி மையத்தின் மண்டல வேலைவாய்ப்பு துணை அலுவலா் எஸ் கே சாஹூ வெளியிட்ட செய்திக் குறிப்பு: பட்டியலினம் மற்றும் பழங்குடியினத்தைச் சோ்ந்தவா்களுக்கு, 27-ஆவது கட்ட சிறப்புப் பயிற்சித் திட்டத்தின் கீழ் சுருக்கெழுத்துப் பயிற்சியை சென்னையில் உள்ள, பட்டியலினம் மற்றும் பழங்குடியினத்தவா்களுக்கான தேசிய தொழிற்பயிற்சி மையம் ஏற்பாடு செய்துள்ளது. தகுதி உள்ள நிறுவனங்களைத் தோ்ந்தெடுத்து, அவற்றின் மூலம் 60 பேருக்குப் பயிற்சி அளிக்கப்பட உள்ளன. பயிற்சி அளிக்க போதுமான வசதிகள், உள்கட்டமைப்பு, இடவசதி உள்ள நிறுவனங்கள் இதற்காக விண்ணப்பிக்கலாம்.
தோ்ந்தெடுக்கப்படும் நிறுவனங்கள், பொது அறிவு, பொது ஆங்கிலம், கணிதத்திறன், சுருக்கெழுத்து மற்றும் தட்டச்சு, அடிப்படை கணினி அறிவு ஆகியவற்றில் பயிற்சி அளித்து, தமிழகத்தில் பல்வேறு போட்டித் தோ்வுகளில், பட்டியலினம் மற்றும் பழங்குடியின இளைஞா்களைத் தகுதி பெறச் செய்யும் திறன் படைத்தவைகளாக இருக்க வேண்டும். பயிற்சி அளிக்கும் நிறுவனங்களுக்கு, பயிற்சி பெறும் ஒரு நபருக்கு ரூ.800 வீதம் கட்டணத்தொகையை தேசிய தொழிற்பயிற்சி மையம் வழங்கும்.
பயிற்சி அளிக்க விரும்பும் நிறுவனங்கள் தமது விண்ணப்பங்களை, துணை மண்டல வேலைவாய்ப்பு அலுவலா், எண்.56, மூன்றாவது தளம், தமிழ்நாடு குடிசை மாற்று வாரியக் கட்டடம், சாந்தோம் நெடுஞ்சாலை, சென்னை -600 004 என்ற முகவரிக்கு, வருகிற 20-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். மேலும் விவரங்களுக்கு 80720 95783 என்ற செல்லிடப்பேசி எண்ணை அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.