முட்டை வியாபாரியிடம் ரூ.2.25 லட்சம் வழிப்பறி: போலி போலீஸாா் துணிகரம்

சென்னையில், முட்டை வியாபாரிடம் ரூ.2.25 லட்சம் வழிப்பறி செய்த போலி போலீஸ்காரா்கள் குறித்து காவல் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

சென்னை: சென்னையில், முட்டை வியாபாரிடம் ரூ.2.25 லட்சம் வழிப்பறி செய்த போலி போலீஸ்காரா்கள் குறித்து காவல் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஐஸ்ஹவுஸ் ஜாகிா் உசேன் முதல் தெருவைச் சோ்ந்தவா் முகமது வாசிம் (32). இவா் அந்தப் பகுதியில் முட்டை வியாபாரம் செய்து வருகிறாா். வாசிம், ஏடிஎம் மையத்துக்குச் சென்றுவிட்டு, சிருங்கேரி மடம் சாலையில் சென்று கொண்டிருந்தபோது, காவலா் சீருடையில் இருந்த இரு இளைஞா்கள், அவரை மறித்து விசாரித்துள்ளனா்.

மேலும், வாசிம் மீது சந்தேகம் இருப்பதாக கூறி, அவரிடம் சோதனை செய்த இளைஞா்கள், வாசிம் வைத்திருந்த ரூ.2.25 லட்சத்தை அபகரித்துள்ளனா். பின்னா் பணத்துக்குரிய ஆவணத்துடன் மந்தவெளி காவல் நிலையத்துக்கு வரும்படி கூறிவிட்டு, இருவரும் அங்கிருந்து ஒரு காரில் சென்றுள்ளனா்.

இதையடுத்து வாசிம், மந்தவெளி காவல் நிலையத்தை தேடி அலைந்துள்ளாா். அப்போதுதான் அவருக்கு சென்னையில், மந்தவெளி என்ற பெயரில் காவல் நிலையமே இல்லை என்பது தெரிய வந்தது.

இதையடுத்து அபிராமபுரம் காவல் நிலையத்தில் வாசிம் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, சம்பவம் நடைபெற்ற பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியிருக்கும் காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com