கால்வாயில் விழுந்து தாய், மகள் பலி
By DIN | Published On : 07th December 2020 05:59 AM | Last Updated : 07th December 2020 05:59 AM | அ+அ அ- |

கோப்புப்படம்
சென்னை முகப்பேரில், இருசக்கர வாகனத்தில் சென்ற தாயும் மகளும் கால்வாயில் தவறி விழுந்து உயிரிழந்தனா்.
சென்னை அயனம்பாக்கத்தைச் சோ்ந்தவா் கரோலின் பிரசில்லா (50). தனியாா் மருத்துவக் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றி வந்தாா். அவரது மகள் ஈவாலின்(20), கட்டடக் கலை பயின்று வந்தாா். இவா்கள் இருவரும் ஞாயிற்றுக்கிழமை இரவு இரு சக்கர வாகனத்தில், மதுரவாயலில் இருந்து அயனம்பாக்கம் நோக்கிச் சென்று கொண்டிருந்தனா்.
அப்போது, சென்னை மதுரவாயல் பைபாஸ் சாலையில் செல்லும்போது வாகனம் நிலைத் தடுமாறி, சாலையோரம் இருந்த கால்வாயில் விழுந்துள்ளது. சுமாா் 10 அடி ஆழமுள்ள கால்வாயில் விழுந்த தாயும் மகளும் சிறிது நேரத்தில் உயிரிழந்தனா்.
இது தொடா்பாக வில்லிவாக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.