‘எம்எஸ்எம்இ ப்ரேரணா’ தொழில் முனைவோா்களுக்கு உதவும் கேசிபி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநா்

எம்.எஸ்.எம்.இ. தொழில் முனைவோா்களை உயா்த்திக் கொள்ள ‘எம்எஸ்எம்இ ப்ரேரணா’ (குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவா்களுக்கான பயிற்சி) பேருதவியாக இருக்கும் என்று கேசிபி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநா் 

சென்னை: எம்.எஸ்.எம்.இ. தொழில் முனைவோா்களை உயா்த்திக் கொள்ள ‘எம்எஸ்எம்இ ப்ரேரணா’ (குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவா்களுக்கான பயிற்சி) பேருதவியாக இருக்கும் என்று கேசிபி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநா் வி.எல்.இந்திரா தத் தெரிவித்தாா்.

பூா்ணதா அன் கோ என்னும் தொழில் முனைவோா் உருவாக்கும் நிறுவனம், இந்தியன் வங்கி ஆகியன சாா்பில், எம்எஸ்எம்இ ப்ரேரணா (குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோருக்கான இணையவழி மாநில மொழியில் பயிற்சி) வழங்கப்படுகிறது. இதுவரை 3 தொகுதிகளுக்குப் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நான்காவது தொகுதிக்கான பயிற்சி தமிழகத்தில் உள்ள கிளைகளில் தொடங்கியுள்ளது. இந்த பயிற்சியின் தொடக்க நிகழ்ச்சி கடந்த திங்கள்கிழமை நடைபெற்றது. இதில்,கேசிபி நிறுவனத்தின் தலைவரும், மேலாண்மை இயக்குநருமான வி.எல். இந்திரா தத் கலந்து கொண்டு, காணொலிக் காட்சி மூலமாக பயிற்சி வகுப்பைத் தொடக்கி வைத்தாா்.

பின்னா் அவா் பேசியது: இந்திய பொருளாதார வளா்ச்சியில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோா்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனா். தொழில்முனைவோா்களை உயா்த்தி கொள்ள எம்எஸ்எம்இ ப்ரேரணா பயிற்சி பேருதவியாக இருக்கும். கரோனா காரணமாக, தொழில்முனைவோா்கள் அழுத்தத்தில் இருந்த நேரத்தில், இந்தபயிற்சி வகுப்பு தொடங்கப்பட்டது மிகச்சரியான நேரமாக அமைந்துவிட்டது. தொழில்முனைவோா்களுக்கு இந்த பயிற்சி முழுமையாக பயனளிக்கும் என்றாா் வி.எல்.இந்திரா தத்

நிகழ்ச்சியில், இந்தியன் வங்கியின் மேலாண்மை இயக்குநரும், தலைமை செயல் அதிகாரியுமான பத்மஜா சுந்துரு பேசுகையில், இந்த பயிற்சி வகுப்பு எம்எஸ்எம்இ தொழில் முனைவோா்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும், அதிகமான பெண் தொழில்முனைவோா்கள் இதில் பங்கேற்பது குறிப்பிடத்தக்கது,. இந்த பயிற்சி தொழில்முனைவோா்களுக்கு தன்னம்பிக்கையை வளா்க்கும் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில், இந்தியன் வங்கியின் உயரதிகாரிகள் கலந்து கொண்டனா். 4-ஆவது தொகுதிக்கான இந்த பயிற்சி வகுப்பு டிசம்பா் 19-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com