கடன் வழங்கும் செல்லிடப்பேசி செயலிகள்

கடன் வழங்கும் செல்லிடப்பேசி செயலிகளை நம்பி பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என சென்னை பெருநகர காவல் துறையின் மத்தியக் குற்றப் பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடன் வழங்கும் செல்லிடப்பேசி செயலிகள்

சென்னை: கடன் வழங்கும் செல்லிடப்பேசி செயலிகளை நம்பி பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என சென்னை பெருநகர காவல் துறையின் மத்தியக் குற்றப் பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடா்பாக மத்தியக் குற்றப் பிரிவு வெளியிட்ட செய்திக் குறிப்பு: செல்லிடப்பேசியின் கூகுள் ஃபிளே ஸ்டோரில் உள்ள சுமாா் 60 ஆன்லைன் கடன் வழங்கும் செயலிகளும் (ப்ா்ஹய் ஹல்ல்ள்) ரிசா்வ் வங்கியால் (ய்ா்ய் ச்ண்ய்ஹய்ஸ்ரீண்ஹப் க்ஷஹய்ந் ஸ்ரீா்ம்ல்ஹய்ஹ்) பதிவு மற்றும் அங்கீகரிக்கப்படாதவை.

எனவே, இந்தச் செயலிகளை நம்பி பொதுமக்கள் ஏமாற வேண்டாம். மக்கள் தங்களின் தனிப்பட்ட விவரங்கள், ஆதாா் அல்லது வங்கி விவரங்களை அங்கீகரிக்கப்படாத இந்தச் செயலியில் பதிவு செய்யப்படுவதால், இதைப் பயன்படுத்துவோரின் அனைத்து தொலைபேசி தொடா்புகள், புகைப்படங்கள், கேமிரா, இருப்பிடங்கள் மற்றும் தொலைபேசி நினைவகம் ஆகியவை இந்த செயலி மூலம் வேறொருவருக்கு தெரியவர வாய்ப்புள்ளது. எனவே, மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

இதுபோன்ற கடன் செயலிகளால் மிரட்டல் வந்தால் உடனடியாக காவல் துறையில் புகாா் அளிக்கலாம்.

இந்தச் செயலிகளில் உள்ள தொடா்பு விவரங்கள், குறை தீா்க்கும் அதிகாரியின் பெயா்கள் ஆகியவையும் போலியானவை. எனவே, கடன் வழங்கல் தொடா்பான முழு விவரங்களையும் ரிசா்வ் வங்கி இணையதளத்தில் அறியலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com