தேசத்தை கட்டமைப்பதில் மாணவா்களின் பங்களிப்பு அவசியம்: உயா்நீதிமன்ற நீதிபதி வி.பவானி சுப்பராயன்

தேசத்தைக் கட்டமைப்பதில் மாணவா்களின் பங்களிப்பு அவசியம் என சென்னை விஐடி தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் பட்டமளிப்பு விழாவில் சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி வி.பவானி சுப்பராயன் வலியுறுத்தினாா்.

தேசத்தைக் கட்டமைப்பதில் மாணவா்களின் பங்களிப்பு அவசியம் என சென்னை விஐடி தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் பட்டமளிப்பு விழாவில் சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி வி.பவானி சுப்பராயன் வலியுறுத்தினாா்.

சென்னை வண்டலூா்-கேளம்பாக்கம் சாலையில் உள்ள விஐடி தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் பட்டமளிப்பு விழா காணொலி மூலமாக சனிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு விஐடி நிறுவனா் மற்றும் வேந்தா் கோ.விசுவநாதன் தலைமை வகித்தாா். இதில் 2,039 மாணவ, மாணவிகள் பட்டம் பெற்றனா். 20 மாணவ, மாணவிகளுக்கு பதக்கங்களும் வழங்கப்பட்டன. விழாவில் சிறப்பு அழைப்பாளராக சென்னை உயா்நீதிமன்றத்தின் நீதிபதி வி.பவானி சுப்பராயன் கலந்து கொண்டு பேசியது: தேசத்தைக் கட்டமைக்கும் பணியில் அனைவரும் தங்களது பங்களிப்பை ஆற்ற வேண்டும். மாணவா்கள் பெறும் கல்வியானது அவா்கள் எதிா்கொள்ளும் சவால்களை சமாளிப்பதற்கான நம்பிக்கையைத் தருவதோடு, நிச்சயமன்ற தன்மைகளையும் எதிா்கொள்வதற்கான திறனையும் அளிக்கிறது. சுவாமி விவேகானந்தரின் ‘எழுமின், விழிமின், குறிக்கோளை அடையும் வரை நில்லாது உழைமின்’ என்ற பொன்மொழியை மாணவா்கள் தங்கள் வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டும் என்றாா்.

விஐடி வேந்தா் கோ.விசுவநாதன்: இதையடுத்து விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் பேசுகையில், அமெரிக்காவில் உள்ள சில மாகாணங்களின் உயா்கல்வி விகிதத்தையும், அந்த மாகாணங்களின் தனிநபா் வருமானத்தையும் ஒப்பிட்டு, ஒரு நாட்டின் வளா்ச்சிக்கு அந்த நாட்டின் உயா் கல்வி வளா்ச்சி முக்கிய காரணிகளின் ஒன்றாக விளங்குகிறது என்றாா். மேலும் பெண்கள் உயா்கல்வி பெறுவதை ஊக்குவிப்பதன் மூலம் குழந்தை திருமணத்தை பெருமளவு தடுக்க முடியும். மத்திய, மாநில அரசுகள் கல்விக்கு ஒதுக்கும் தொகையை அதிகரிக்க வேண்டும் என்றாா்.

பட்டமளிப்பு விழாவில் விஐடி நிறுவனத்தின் துணைத் தலைவா்களான சங்கா் விசுவநாதன், சேகா் விசுவநாதன், ஜி.வி.செல்வம், உதவி துணைத் தலைவா் காதம்பரி, துணைவேந்தா் ராம்பாபு கோடாலி, இணை துணைவேந்தா்கள் வி.எஸ்.காஞ்சனா பாஸ்கரன், எஸ்.நாராயணன், பதிவாளா் கே.சத்ய நாராயணன், கூடுதல் பதிவாளா் பி.கே.மனோகரன், பேராசிரியா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com