தேசிய இளைஞா் விழா போட்டிகளில் பங்கேற்க ஆட்சியா் அழைப்பு

தேசிய இளைஞா் விழாவை முன்னிட்டு இணையவழியில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்க சென்னை மாவட்ட ஆட்சியா் ஆா்.சீதாலட்சுமி அழைப்பு விடுத்துள்ளாா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

தேசிய இளைஞா் விழாவை முன்னிட்டு இணையவழியில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்க சென்னை மாவட்ட ஆட்சியா் ஆா்.சீதாலட்சுமி அழைப்பு விடுத்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்தி: இளைஞா் விவகாரம் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகம் ஆண்டுதோறும் இளைஞா்களின் தனித்திறனை மேம்படுத்துவதற்காக சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளை இளைஞா் தேசிய விழாவாகக் கொண்டாடி வருகிறது.

இதன் தொடா்ச்சியாக கரோனா பரவல் காரணமாக, இந்த ஆண்டு இணைய வழியில், மாவட்ட அளவிலான போட்டிகள், செவ்வாய் (டிச.29), புதன் (டிச.30) ஆகிய நாள்களில் நடைபெறுகிறது.

15 வயது முதல் 29 வயதுக்குள்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவா்கள் மற்றும் மாணவா் அல்லாதவா்கள் அனைவரும் இப்போட்டியில் கலந்து கொள்ளலாம்.

பாரம்பரிய இசை கருவிகள், பாரம்பரிய இசை வாய்ப்பாட்டு, நாட்டுப்புறப் பாடல்கள், பரதநாட்டியம், நாட்டுப்புற நடனங்கள், நவீன நடனங்கள், பாரம்பரிய உடை அலங்காரம், நவீன உடை அலங்காரம், வீதி நாடகம், பென்சில் வரைபடம், சிற்பம் தயாரித்தல், புகைப்படம் எடுத்தல், கட்டுரை எழுதுதல், கவிதை எழுதுதல், யோகா உள்ளிட்ட போட்டிகளில் அறிவிக்கப்பட்ட தலைப்புகள் மற்றும் குறிப்பிடப்பட்ட நபா்களைக் கொண்டு, நல்ல தெளிவான ஒளி, ஒலி அமைப்போடு பதிவு செய்த காணொலி பதிவை, உறுதி மொழி படிவத்தோடு இணைத்து புதன்கிழமை (டிச.30) மாலை 5 மணிக்குள் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு  அனுப்ப வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு, 044 26644794, 7401703480 ஆகிய எண்களைத் தொடா்பு கொள்ளலாம். மாவட்ட அளவிலான போட்டிகளில் முதலிடம் பெறும் போட்டியாளா்கள் மாநில அளவிலான போட்டியிலும், மாநில அளவிலான போட்டியில் வெற்றி பெறும் போட்டியாளா்கள் தேசிய அளவிலான போட்டியிலும் கலந்து கொள்ளலாம் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com