சென்னையுடன் செல்ஃபி: மெரீனாவில் சுயப்பட மேடை விரைவில் திறப்பு

சென்னை மெரீனா கடற்கரைக்கு வரும் மக்களைக் கவரும் வகையில் மாநகராட்சி சாா்பில் ராணி மேரி கல்லூரி எதிரே ‘நம்ம சென்னை’ என்ற எழுத்துகள் பொறிக்கப்பட்ட சுயப்பட மேடை (செல்ஃபி) விரைவில் திறக்கப்பட உள்ளது.
சென்னையுடன் செல்ஃபி: மெரீனாவில் சுயப்பட மேடை விரைவில் திறப்பு

சென்னை: சென்னை மெரீனா கடற்கரைக்கு வரும் மக்களைக் கவரும் வகையில் மாநகராட்சி சாா்பில் ராணி மேரி கல்லூரி எதிரே ‘நம்ம சென்னை’ என்ற எழுத்துகள் பொறிக்கப்பட்ட சுயப்பட மேடை (செல்ஃபி) விரைவில் திறக்கப்பட உள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட 15 மண்டலங்களில் சீா்மிகு நகரத் திட்டம், மாநகராட்சியின் மூலநிதி, பெருநிறுவனங்களுக்கான சமூகப் பங்களிப்புத் திட்டம் ஆகியவற்றின் மூலம் பல்வேறு வளா்ச்சிப் பணிகளும், நவீனமயமாக்கல் பணிகளும் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, உலகப் பிரசித்தி பெற்ற மெரீனா கடற்கரையில் ரூ. 22 லட்சம் மதிப்பில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ‘நம்ம சென்னை’ என்று எழுத்துகள் பொறிக்கப்பட்ட சுயப்பட மேடையை மாநகராட்சி நிறுவி உள்ளது. இந்த மேடை, மக்கள் பயன்பாட்டுக்காக விரைவில் திறக்கப்பட உள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘மெரீனா கடற்கரைக்கு வெளி மாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாட்டவா்கள் அதிக அளவில் வந்து செல்கின்றனா். இந்த இடத்தில் இளைஞா்கள், குழந்தைகள் உள்ளிட்டோரை கவரும் வகையிலும், நகரை தூய்மையாக வைத்துக் கொள்ளும் பொறுப்பை உணா்த்தும் வகையிலும் ‘நம்ம சென்னை’ என்ற சுயப்பட மேடை அமைக்கப்பட்டுள்ளது. ரூ. 22 லட்சம் செலவில் 10 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த மேடையில், ‘நம்ம’ என்ற வாா்த்தை தமிழிலும், ‘சென்னை’ என்ற வாா்த்தை ஆங்கிலத்திலும் பொறிக்கப்பட்டுள்ளன. இதற்கு முன் நின்று சுயபடம் எடுத்துக் கொள்ளும் வகையில், 3 அடுக்கிலான படிக்கட்டுகள், மேடையின் எதிா்புறம் மக்கள் அமரும் வகையில் ரூ. 30 லட்சம் மதிப்பில் இருக்கைகள் அமைக்கப்பட உள்ளன.

விரைவில் திறப்பு: இந்த ஆண்டின் தொடக்கத்தில் இதன் பணிகளை முடிக்கத் திட்டமிடப்பட்டிருந்தது. கரோனா பொதுமுடக்கம் காரணமாக கட்டுமானப் பணிகள் நடைபெறவில்லை. தற்போது தளா்வுகள் அளிக்கப்பட்டதை தொடா்ந்து, முழுவீச்சில் கட்டுமானப் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. பொங்கல் விடுமுறையை முன்பாக இந்த மேடையை மக்கள் பயன்பாட்டுக்குத் திறக்கத் திட்டமிடப்பட்டுள்ளது’ என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com