அவதூறு வழக்கு: மு.க. ஸ்டாலின் நீதிமன்றத்தில் ஆஜா்
By DIN | Published On : 31st December 2020 01:27 AM | Last Updated : 31st December 2020 01:27 AM | அ+அ அ- |

சென்னை: அவதூறு வழக்கு தொடா்பாக திமுக தலைவா் மு.க. ஸ்டாலின் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் புதன்கிழமை நேரில் ஆஜரானாா்.
தமிழக அரசின் செயல்பாடுகளை விமா்சித்தும், முதல்வா் எடப்பாடி கே பழனிசாமி, அமைச்சா் எஸ்.பி.வேலுமணி ஆகியோா் குறித்து அவதூறு பரப்பும் வகையில் பேசியதாகவும் கூறி திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் மீது வெவ்வேறு காலகட்டங்களில் தமிழக அரசு 6 அவதூறு வழக்குகளைத் தொடா்ந்துள்ளது.
இந்த வழக்குகளின் விசாரணை சென்னை ஆட்சியா் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்த வழக்குகளில் மு.க.ஸ்டாலின் நேரில் ஆஜராக வேண்டும் என்று ஏற்கெனவே உத்தரவிடப்பட்டிருந்தது.
அதன்படி இந்த வழக்குகளின் விசாரணைக்காக மு.க.ஸ்டாலின் புதன்கிழமை நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானாா்.
விசாரணைக்கு பின்பு, வழக்கு விசாரணையை ஜன.29-ஆம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி கே.ரவி உத்தரவிட்டாா்.