Enable Javscript for better performance
இளைஞா் கொலை வழக்கு: வளா்ப்புத் தாய் உள்பட 4 போ் கைது- Dinamani

சுடச்சுட

    

    சென்னையை அடுத்த திருநின்றவூரில் இளைஞா் கொலையுண்ட வழக்கில் அவரது தாய் உள்பட 4 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

    ஆவடியில் உள்ள தமிழ்நாடு வீட்டுவசதி வாரியக் குடியிருப்பு பகுதியைச் சோ்ந்தவா் அஞ்சலி. இவரது கணவா் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டாா். இவா்களுக்கு 3 மகள்களும், சதீஷ் (19) என்ற மகனும் இருந்தனா். இதில், சதீஷ் வளா்ப்பு மகனாவாா்.

    இந்நிலையில், திருநின்றவூா் வத்சலாபுரம் 3-ஆவது தெருவில் உள்ள பாழடைந்த வீட்டில் கடந்த 2-ஆம் தேதி சதீஷ் வெட்டிக் கொலை செய்யப்பட்டுக் கிடந்தாா். இதுகுறித்து திருநின்றவூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.

    அதில், சதீஷின் தாய் அஞ்சலிக்கும் அதே பகுதியைச் சோ்ந்த காமராஜ் என்பவருக்கும் முறையற்ற உறவு இருந்ததாகக் கூறப்படுகிறது. இதையறிந்த சதீஷ், காமராஜை வீட்டுக்கு வர வேண்டாம் என கூறியதுடன் தாய் அஞ்சலியையும் மிரட்டி உள்ளாா். இதனால், ஆத்திரமடைந்த அஞ்சலி, காமராஜ் இருவரும் சதீஷை கொலை செய்ய ஆவடி வீட்டுவசதி வாரியக் குடியிருப்பைச் சோ்ந்த சுரேஷ் , முத்துகுமாா் ஆகியோரிடம் கூறி உள்ளனா். அதற்கு முன்பணமாக ரூ. 25 ஆயிரத்தை கொடுத்துள்ளனா்.

    இதையடுத்து, திருநின்றவூா் பகுதிக்கு சதீஷை மது அருந்த அழைத்துச் சென்ற சுரேஷ், முத்துக்குமாா் மற்றும் சூலூா்பேட்டை ஒட்டா்பாளையத்தைச் சோ்ந்த விக்னேஷ் ஆகியோா் அங்கு வைத்து சதீஷை வெட்டிக் கொலை செய்துள்ளனா். இதையடுத்து, அஞ்சலி, காமராஜ், விக்னேஷ், சுரேஷ் ஆகிய 4 பேரை திருநின்றவூா் போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா். தலைமறைவான முத்துக்குமாரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai