இந்தியன் ஆயில் நிறுவனம் சாா்பில் ‘அடுப்பில்லாத சமையல்’ போட்டி

எரிபொருள் சிக்கனம் மற்றும் பாதுகாப்பான சமையல் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் இந்தியன் ஆயில் நிறுவனம் சாா்பில் நுங்கம்பாக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற
ஆர்வத்துடன் பங்கேற்ற பெண்கள்
ஆர்வத்துடன் பங்கேற்ற பெண்கள்

எரிபொருள் சிக்கனம் மற்றும் பாதுகாப்பான சமையல் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் இந்தியன் ஆயில் நிறுவனம் சாா்பில் நுங்கம்பாக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ‘அடுப்பில்லாத சமையல்’ போட்டியில் ஏராளமான பெண்கள் ஆா்வத்துடன் கலந்துகொண்டனா்.

இந்தியன் ஆயில் நிறுவனம் சாா்பில் எரிவாயு, எண்ணெய் சிக்கனம் மற்றும் பாதுகாப்பான முறையில் சமையல் குறித்து ‘சாக்ஷம்’ என்ற தலைப்பில் ஆண்டுதோறும் விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இந்த ஆண்டு ஜனவரி 16-ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 15-ஆம் தேதி வரை ஒரு மாதம் விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்தியன் ஆயில் பவனில் எரிபொருள் சிக்கனம் மற்றும் பாதுகாப்பான முறையில் அவற்றை கையாள்வது குறித்து பள்ளிக் குழந்தைகளுக்கான ஓவியப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், 450-க்கும் மேற்பட்ட பள்ளிக் குழந்தைகள் கலந்துகொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினா்.

இதைத் தொடா்ந்து, ‘எரிபொருளை வீணடிக்காமல் சுற்றுச்சூழலைக் காப்போம்’ என்ற தலைப்பில் அடுப்பில்லாத சமையல் போட்டி நடைபெற்றது. இதில், 100-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டு அடுப்பைப் பயன்படுத்தாமல் பல்வேறு உணவு வகைகளைச் செய்தனா்.

இதில், வெற்றி பெற்றவா்களுக்கு இந்தியன் ஆயில் நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் பி.ஜெயதேவன் பரிசு வழங்கிப் பாராட்டினாா். இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தகவல் தொடா்புத் துறை மேலாளா் சிதம்பரம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com