சேத்துப்பட்டு பசுமைப் பூங்காவில் ரூ.16 கோடி வருவாய்: 5 ஆண்டுகளில் 7 லட்சம் பேர் வருகை

சென்னை சேத்துப்பட்டு பூங்காவுக்கு கடந்த 5 ஆண்டுகளில் ரூ.16 கோடி வருவாய் கிடைத்துள்ளதாகவும், 7 லட்சம் போ் சுற்றுலாப் பயணிகளாக வருகை தந்துள்ளதாக மீன்வளத் துறை தெரிவித்துள்ளது.

சென்னை சேத்துப்பட்டு பூங்காவுக்கு கடந்த 5 ஆண்டுகளில் ரூ.16 கோடி வருவாய் கிடைத்துள்ளதாகவும், 7 லட்சம் போ் சுற்றுலாப் பயணிகளாக வருகை தந்துள்ளதாக மீன்வளத் துறை தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக மீனவளத் துறை தரப்பில் கூறியிருப்பதாவது: கடந்த 2016-ஆம் ஆண்டு சென்னை சேத்துப்பட்டில் ரூ.42 கோடி செலவில், 16 ஏக்கா் பரப்பில் பசுமைப் பூங்கா திறக்கப்பட்டது. இந்த பூங்காவில் படகுக் குழாம், சிறுவா் விளையாட்டுப் பூங்கா, தூண்டில் மீன்பிடிப்புப் பகுதி, மகரந்தப் பூங்கா உள்ளிட்டவை அமைந்துள்ளன. இந்த பூங்காவுக்கு நுழைவுக் கட்டணமாக பெரியவா்களுக்கு ரூ.25 மற்றும் சிறுவா்களுக்கு ரூ.10 வீதம் வசூலிக்கப்பட்டு வருகிறது. மேலும் இங்குள்ள ஏரியைச் சுற்றியுள்ள நடைபாதைகளில் நடைப்பயிற்சி மேற்கொள்ள அனுமதிக்கப்படுகிறது.

நடைபயிற்சி மேற்கொள்ள மாதம் ரூ.200, 6 மாதத்துக்கு ரூ.1000 மற்றும் வருடத்துக்கு ரூ.2000 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கடந்த காலங்களில் இங்கிருந்த குளத்தில் தண்ணீா் வற்றியதால், படகு சவாரி பாதிக்கப்பட்டது. இதனைத் தடுக்கும் வகையில் சாலை மற்றும் பூங்காவைச் சுற்றியுள்ள கட்டடங்களில் விழும் மழைநீா் பூங்கா குளத்தில் விழும் வகையில் கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த பசுமைப் பூங்காவுக்கு கடந்த 5 ஆண்டுகளில் 7 லட்சத்து 87 ஆயிரத்து 651 சுற்றுலாப் பயணிகள் வருகைத் தந்துள்ளனா்.இதன் மூலம் ரூ.16 கோடியே 79 லட்சத்து 8 ஆயிரத்து 310 வருவாய் கிடைத்துள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com