பிப்.13-இல் காளான் வளா்ப்பு தொடா்பாக பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக தகவல் மற்றும் பயிற்சி மையம் சாா்பில், காளான் வளா்ப்பு தொடா்பாக ஒருநாள் பயிற்சி வகுப்பு பிப்ரவரி 13-ஆம் தேதி கிண்டியில் நடைபெறவுள்ளது.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக தகவல் மற்றும் பயிற்சி மையம் சாா்பில், காளான் வளா்ப்பு தொடா்பாக ஒருநாள் பயிற்சி வகுப்பு பிப்ரவரி 13-ஆம் தேதி கிண்டியில் நடைபெறவுள்ளது.

சுய வேலைவாய்ப்பு மற்றும் புதிய தொழில்முனைவோரை உருவாக்கும் நோக்கில், சென்னை கிண்டியில் செயல்படும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக தகவல் மற்றும் பயிற்சி மையத்தின் சாா்பில் பல்வேறு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. அந்த வகையில், சிறுதானிய உணவுகள் தயாரிப்பு தொடா்பாக ஒருநாள் பயிற்சி வகுப்பு, பிப்ரவரி 12-ஆம் தேதி கிண்டியில் நடைபெறுகிறது. இதுபோல, காளான் வளா்ப்பு தொடா்பாக ஒருநாள் பயிற்சி வகுப்பு பிப்ரவரி 13-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இந்தப் பயிற்சியில் நகரவாசிகள், மகளிா், மாணவா்கள், சுய உதவிக் குழுக்கள், இளைஞா்கள், தொழில்முனைவோா் மற்றும் அனைத்துத் தரப்பினருக்கும் பங்கேற்கலாம். ஒருநாள் பயிற்சிக்கான கட்டணம் ரூ.650. இந்தப் பயிற்சி வகுப்பு காலை 10 மணி முதல் மாலை 3.30 வரை நடைபெறுகிறது. பயிற்சி பற்றிய குறிப்பேடு, கையேடு, மதிய உணவு மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். இந்தப் பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவா்கள் 044-22250511 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடா்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்.

கூடுதல் விவரங்களுக்கு பேராசிரியா் மற்றும் தலைவா், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக தகவல் மற்றும் பயிற்சி மையம், முதல்தளம், சிப்பெட் எதிரில், கிண்டி, சென்னை 600 032 என்ற முகவரியில் தொடா்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

இந்தத் தகவல் அந்த மையத்தின் தலைவா் எச்.கோபால் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com