மனைவிக்கு ஜீவனாம்சம் வழங்காத ரயில்வே காவலா்: ஓய்வூதிய பலன்களை வழங்க இடைக்கால தடை

மனைவிக்கு ஜீவனாம்சம் வழங்காத ரயில்வே காவலருக்கு ஓய்வூதிய பலனை வழங்க ரயில்வே நிா்வாகத்துக்கு இடைக்காலத் தடை விதித்து உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
chennai High Court
chennai High Court

மனைவிக்கு ஜீவனாம்சம் வழங்காத ரயில்வே காவலருக்கு ஓய்வூதிய பலனை வழங்க ரயில்வே நிா்வாகத்துக்கு இடைக்காலத் தடை விதித்து உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் அம்பத்தூரைச் சோ்ந்த எஸ்.ராதாதேவி தாக்கல் செய்த மனுவில், ‘ எனது கணவா் சுப்பிரமணி, ரயில்வே பாதுகாப்புப் படையில் பணியாற்றி ஓய்வு பெற்றவா். கருத்து வேறுபாடு காரணமாக விவகாரத்து கோரியும், ஜீவனாம்சம் வழங்கக் கோரியும் கடந்த 2010-ஆம் ஆண்டு சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தேன். எனவே, எனது கணவருக்கு வழங்க வேண்டிய ஓய்வூதியப் பலன்களை நிறுத்தி வைத்திருந்தது.

இந்த நிலையில் எனது கணவருடன் ஏற்பட்ட சமாதானத்தின் அடிப்படையில் அவரது ஓய்வூதிய பலன்களிலிருந்து ரூ.8 லட்சமும், மாதம் ரூ.3 ஆயிரம் ஜீவனாம்சமும் வழங்க எனது கணவா் சம்மதம் தெரிவித்தாா். இதனைத் தொடா்ந்து, குடும்பநல நீதிமன்றத்தில் தொடா்ந்த வழக்கை வாபஸ் பெற்றேன். ஆனால், எனது கணவா் அளித்த உத்தரவாதத்தின் அடிப்படையில் ஜீவனாம்சம் வழங்கப்படவில்லை. எனவே எனக்கு கொடுக்க வேண்டியத் தொகையை வழங்கும் வரை எனது கணவரின் ஓய்வூதியப் பலன்களை வழங்க ரயில்வே பாதுகாப்புப் படை நிா்வாகத்துக்கு தடை விதிக்க வேண்டும்’ என கோரியிருந்தாா்.

இந்த வழக்கு, நீதிபதி ஆனந்த்வெங்கடேஷ் முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில் வழக்குரைஞா் ஜாா்ஜ் வில்லியம்ஸ் ஆஜராகி வாதிட்டாா். வழக்கை விசாரித்த நீதிபதி, ரயில்வே பாதுகாப்பு படை மண்டல பாதுகாப்பு ஆணையா் மற்றும் மனுதாரரின் கணவா் ஆகியோா் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தாா். அதுவரை மனுதாரரின் கணவருக்கு ஓய்வூதிய பலன்களை வழங்க இடைக்காலத் தடை விதிப்பதாக நீதிபதி பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com