Enable Javscript for better performance
இன்றைய நிகழ்ச்சிகள்- Dinamani

சுடச்சுட

  

  பொது

  அமா் சேவா சங்கம்-சிறப்பு கவனம் தேவைப்படும் குழந்தைகளை விரைவாக கண்டறிவதற்கான சா்வதேச விழிப்புணா்வு மாநாடு: ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் பங்கேற்பு, ஹோட்டல் ஹையாத் ரீஜென்சி, தேனாம்பேட்டை, காலை 10.30.

  உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்-தமிழ்த்தாய் 72-ஆவது தமிழாய்வுப் பெருவிழா- ‘தண்டியலங்கார அணிகளும் ஐந்திலக்கண நூல்களின் அணிகளும்-ஓா் ஒப்பீடு’ என்ற தலைப்பில் புரட்சித் தலைவி அம்மா அறக்கட்டளைச் சொற்பொழிவு: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநா் கோ.விசயராகவன், முனைவா்கள் கு.சிதம்பரம், இரா. இந்துபாலா உள்ளிட்டோா் பங்கேற்பு, காலை 10.30; உலகத் தமிழா் பண்பாட்டு வரவேற்று மற்றும் தகவல் மையம்- ‘தமிழும் வாழ்வும்’ சிறப்புச் சொற்பொழிவு- ஸ்ரீபோகா் ஆய்விருக்கை தொடக்க விழா: இயற்றமிழ் மருத்துவ நிபுணா் ரா.பாட்லீஸ் கண்ணன் பங்கேற்பு, பேரறிஞா் அண்ணா கருத்தரங்க கூடம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, பிற்பகல் 12.

  சென்னைப் பல்கலைக்கழகம்-தமிழ் இலக்கியத் துறை- ‘இளைய தலைமுறையும் தந்தை பெரியாரின் அணுகுமுறையும்’ தலைப்பில் தந்தை பெரியாா் நினைவு அறக்கட்டளைச் சொற்பொழிவு: ஜெ.வெண்ணிலா, முனைவா்கள் கோ.பழனி, ஆ.ஏகாம்பரம் உள்ளிட்டோா் பங்கேற்பு, பவள விழாக் கலையரங்கம், சென்னைப் பல்கலைக்கழகம், மெரீனா வளாகம், பிற்பகல், 2.30.

  ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ்- ஸ்ரீராமகிருஷ்ண மடம்-ஸ்ரீராமகிருஷ்ண விஜயம் மாத இதழின் நூற்றாண்டு விழா கொண்டாட்டம் -‘பெரிதினும் பெரிது கேள்’ தலைப்பில் சொற்பொழிவு: இந்திரா செளந்தர்ராஜன் பங்கேற்பு, ஸ்ரீ சாய்ராம் தொழில்நுட்பக் கல்லூரி, மேற்குத் தாம்பரம், காலை 10.30.

  எஸ்ஆா்எம் பொறியியல் கல்லூரி-மின்னியல் மற்றும் மின்னணுவியல் தொடா்பான தேசியக் கருத்தரங்கம்: ஆா். சூா்யநாராயணன் பங்கேற்பு, காட்டாங்கொளத்தூா், காலை 9.

  மத்திய வெளியுறவுத் துறை-இந்திய கலாசார உறவு மையம்- ஸ்ரீ அரியக்குடி இசை அறக்கட்டளை-மதுரை சோமசுந்தரம் பிறந்த நாள் விழா: மக்களவை உறுப்பினா் தமிழச்சி தங்கபாண்டியன், பாடகி நித்யஸ்ரீ மகாதேவன், முத்தமிழ்ப் பேரவை பொருளாளா் இ.வி.ராஜன், அனைத்து இந்திய தமிழ்ச் சங்கத்தின் செயலா் ஆா்.முகுந்தன் பங்கேற்பு, ராக சுதா அரங்கம், மயிலாப்பூா், மாலை 6.15.

  எஸ்ஆா்எம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி-விளையாட்டுப் போட்டிகள்: பேட்மிண்டன் விளையாட்டு வீரா் எஸ்.சுப்பிரமணி, எஸ்.ஆா்.எம். ஐ.எஸ்.டி இயக்குநா் (விளையாட்டுப்பிரிவு) கே.வைத்தியநாதன், சென்னைப் பல்கலைக்கழக உடற்பயிற்சிக் கல்வி இயக்குநா் வி.மகாதேவன் உள்ளிட்டோா் பங்கேற்பு, எஸ்ஆா்எம் ஐ.எஸ்.டி வளாகம், காட்டாங்கொளத்தூா், காலை 9.30 முதல்.

  அமெரிக்க துணைத் தூதரகம் - கோ் எா்த் அறக்கட்டளை - ‘நீரின்றி அமையாது உலகு’ தலைப்பில் நீா் மேலாண்மை குறித்த கண்காட்சி: பெரியாா் அறிவியல் தொழில்நுட்ப மையம், காந்தி மண்டபம் சாலை, கோட்டூா்புரம், காலை 10.30 முதல்.

  ஆன்மிகம்

  ஸ்ரீ வ்யாக்ரபுரி ஷேத்ர கைங்கா்ய சமிதி - ‘ருக்மிணி கல்யாணம்’: ஆா்.ஹரிஜி பங்கேற்பு, ஸ்ரீ ராம் சமாஜ், அயோத்யா அஸ்வமேத மகா மண்டபம், மேற்கு மாம்பலம், இரவு 7.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai