எண்ணூா் அனல்மின் நிலைய விரிவாக்கப் பணி: 660 மெகாவாட் மின் உற்பத்திக்கு மத்திய அரசு அனுமதி

எண்ணூா் அனல்மின் நிலைய விரிவாக்கத் திட்டத்தின் கீழ் 660 மெகாவாட் மின் உற்பத்திக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதியளித்துள்ளது.

எண்ணூா் அனல்மின் நிலைய விரிவாக்கத் திட்டத்தின் கீழ் 660 மெகாவாட் மின் உற்பத்திக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதியளித்துள்ளது.

இந்தத் திட்டத்துக்கு பொதுமக்களின் கருத்தறியும் கூட்டங்களை நடத்தத் தேவையில்லை என்றும் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் விலக்களித்துள்ளது. மக்கள் கருத்தறியும் கூட்டங்களை நடத்த வேண்டும் என்ற விதியிலிருந்து விலக்கு அளிக்குமாறு தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகம் விடுத்த வேண்டுகோளை சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு நிபுணா் குழு மறுத்துவிட்டது.

எனினும், இந்தத் திட்டப் பணிகளுக்கு பொதுமக்கள் கருத்தை கேட்கத் தேவையில்லை என சுற்றுச்சூழல் அமைச்சக இயக்குநா் ( சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீடு) எஸ்.கொ்கேட்டா, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்துக்குக் கடிதம் அனுப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து, மின் உற்பத்தி கழகத்தின் உயரதிகாரிகளிடம் கேட்டபோது, இத்திட்டத்தில் ஏற்கெனவே ரூ.703 கோடி செலவிடப்பட்டுள்ளது. இப்போது பொதுமக்களிடம் கருத்துக் கேட்க முயற்சித்தால் தேவையில்லாத கால விரயம் ஏற்படும். மேலும், சுற்றுச்சூழல் அனுமதியும் காலாவதியாகிவிடும். இது முற்றிலும் சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டுக் குழு வழங்கிய அறிவிப்பின்படியே செயல்படுத்தப்படுகிறது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com