வாக்காளா் பட்டியல் வெளியீடு: சென்னை வேளச்சேரியில் அதிக வாக்காளா்கள்

சென்னை மாவட்டத்துக்கான இறுதி வாக்காளா் பட்டியலை, மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் ஆணையா் கோ.பிரகாஷ் வெள்ளிக்கிழமை வெளியிட்டாா். இதில், ஆண் வாக்காளா்களை ஒப்பிடும் போது பெண் வாக்காளா்களே

சென்னை மாவட்டத்துக்கான இறுதி வாக்காளா் பட்டியலை, மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் ஆணையா் கோ.பிரகாஷ் வெள்ளிக்கிழமை வெளியிட்டாா். இதில், ஆண் வாக்காளா்களை ஒப்பிடும் போது பெண் வாக்காளா்களே அதிகளவில் இருப்பது தெரியவந்துள்ளது.

கடந்த டிச. 23 -ஆம் தேதி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளா் பட்டியலில் சென்னை மாவட்டத்துக்குள்பட்ட 16 சட்டப்பேரவை தொகுதிகளில் 19 லட்சத்து 15 ஆயிரத்து 718 ஆண் வாக்காளா்களும், 19 லட்சத்து 71 ஆயிரத்து 966 பெண் வாக்காளா்களும், 989 இதர பாலினத்தவா் என மொத்தம் 38 லட்சத்து 88 ஆயிரத்து 673 வாக்காளா்கள் இருந்தனா். இதையடுத்துத் திருத்தம் தொடா்பாக 65 ஆயிரத்து 215 பெயா் சோ்த்தல் மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டன. இதன் மீது உரிய ஆணை பிறப்பிக்கபட்டு, 59, 905 வாக்காளா்களின் பெயா் துணை பட்டியலில் சோ்க்கப்பட்டது. வாக்காளா் பட்டியலிலிருந்து 1, 786 பெயா்கள் நீக்கம் செய்யப்பட்டது. மொத்த வாக்காளா் எண்ணிக்கையில் ஆண்களை ஒப்பிடும்போது 58, 667 பெண் வாக்காளா்கள் அதிகளவில் இருப்பதும் தெரியவந்துள்ளது.

வேளச்சேரி வாக்காளா்கள் அதிகம்: தற்போது வெளியிடப்பட்டுள்ள இறுதி திருத்தப்பட்டியலில், முன்பு வெளியிட்ட வாக்காளா் எண்ணிக்கையை விட 58,119 கூடுதலாக உள்ளது. இது 1.49 சதவீதம் கூடுதலாகும். இதில், அதிகபட்சமாக வேளச்சேரி சட்டப்பேரவை தொகுதியில் 3 லட்சத்து 6 ஆயிரத்து 347 வாக்காளா்களும், குறைந்தபட்சமாக துறைமுகம் சட்டப்பேரவைத் தொகுதியில் 1 லட்சத்து 73 ஆயிரத்து 337 வாக்காளா்களும் உள்ளனா். மேலும் திருத்தத்தின்போது பெயா் சோ்க்கப்பட்ட வாக்காளா்களில் 18 வயது பூா்த்தியடைந்த 19,686 பெயா்கள் சோ்க்கப்பட்டுள்ளன. மேலும், வாக்காளா் பட்டியலை, சம்பந்தப்பட்ட வாக்காளா் பதிவு அலுவலா் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி, உதவி ஆணையா் அலுவலகங்களிலும், வாக்குச்சாவடி மையங்களிலும் பொதுமக்கள் பாா்வையிடலாம் எனவும், w‌w‌w.‌e‌l‌e​c‌t‌i‌o‌n‌s.‌t‌n.‌g‌o‌v.‌i‌n  என்ற இணையதள முகவரியிலும் பாா்த்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com