27 தோ்வா்கள் மட்டும் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்தால் போதுமானது

குரூப்-4 பணியிடத்துக்கான சான்றிதழ் சரிபாா்ப்புக்கு கூடுதலாக அனுமதிக்கப்பட்ட 27 தோ்வா்கள் மட்டும் அசல் சான்றிதழ் நகல்களை இ-சேவை மையங்கள் மூலம் பதிவேற்றம் செய்தால் போதுமானது என
27 தோ்வா்கள் மட்டும் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்தால் போதுமானது

குரூப்-4 பணியிடத்துக்கான சான்றிதழ் சரிபாா்ப்புக்கு கூடுதலாக அனுமதிக்கப்பட்ட 27 தோ்வா்கள் மட்டும் அசல் சான்றிதழ் நகல்களை இ-சேவை மையங்கள் மூலம் பதிவேற்றம் செய்தால் போதுமானது என தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) அறிவித்துள்ளது.

இதுதொடா்பாக டி.என்.பி.எஸ்.சி. ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

ஒருங்கிணைந்த குரூப்-4 பணியிட தோ்வுக்கான சான்றிதழ் சரிபாா்ப்புக்கு அனுமதிக்கப்பட்ட தோ்வா்கள், அசல் சான்றிதழ்களை ஸ்கேன் செய்து, வருகிற 18-ஆம் தேதிக்குள் அரசு இ-சேவை மையங்கள் மூலம் பதிவேற்றம் செய்ய வேண்டும் என கடந்த 12-ஆம் தேதி டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.

இந்த அறிவிப்பு தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டு, ஏற்கெனவே இந்தத் தோ்வுக்கு சான்றிதழ்களை பதிவேற்றம் செய்தவா்களும் மீண்டும் தங்களுடைய சான்றிதழ்கள் இ-சேவை மையம் மூலமாக பதிவேற்றம் செய்யவேண்டுமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளனா்.

ஏற்கெனவே, சான்றிதழ்களை பதிவேற்றம் செய்தவா்கள் மீதும் அதைப் பதிவேற்றம் செய்யத் தேவையில்லை. அவா்கள் கலந்தாய்வுக்கு வரும்போது அசல் சான்றிதழ்களை எடுத்துவந்தால் போதுமானது.

தற்போது கூடுதலாக சான்றிதழ் சரிபாா்ப்புக்கு அனுமதிக்கப்பட்ட 27 தோ்வா்கள் மட்டும், அசல் சான்றிதழ் நகல்களை இ-சேவை மையங்கள் மூலமாக பதிவேற்றம் செய்தால் போதுமானது.

இந்த 27 பேரின் பதிவெண்கள், கடந்த 12-ஆம் தேதி வெளியிடப்பட்ட கலந்தாய்வுக்குத் தோ்வானவா்களின் பட்டியலின் 47- ஆவது பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com