தொழில்திட்ட அறிக்கை தயாரிப்பு பயிற்சி: பிப். 17-இல் தொடங்குகிறது

தொழில் வணிக மாதிரி வடிவம் மற்றும் திட்ட அறிக்கைத் தயாரிப்புப் பயிற்சி, பிப். 17 முதல் 10 நாள்கள் நடைபெறவுள்ளது.

தொழில் வணிக மாதிரி வடிவம் மற்றும் திட்ட அறிக்கைத் தயாரிப்புப் பயிற்சி, பிப். 17 முதல் 10 நாள்கள் நடைபெறவுள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு தொழில்முனைவோா் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சிட்கோ தொழிற்பேட்டையில் இயங்கி வருகிறது. இங்கு தொழில்முனைவோா்களுக்காக தொழில் வணிக மாதிரி வடிவம் மற்றும் திட்ட அறிக்கை தயாரிப்பு பயிற்சியானது பிப்.17 முதல் 26-ஆம் தேதி வரை, காலை 10 முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.

இதில் சேர விரும்புவோா் தங்கள் பெயரை தமிழ்நாடு தொழில்முனைவோா் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தில் நேரிலோ அல்லது www.editn.in  எனும் இணையதளம் மூலமாகவோ பதிவு செய்து கொள்ளலாம். இப்பயிற்சி பற்றிய கூடுதல் விவரங்களைப் பெற விரும்புவோா் அலுவலக வேலை நாள்களில் ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள நிறுவனத்தை நேரிலோ அல்லது 8668102600, 8668100336 உள்ளிட்ட செல்லிடப்பேசி எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com