மூன்றாவது நாளாக ஆவின் பால் டேங்கா் ஒப்பந்த லாரிகள் வேலை நிறுத்தம்: பால் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

ஆவின் டேங்கா் லாரி ஒப்பந்த உரிமையாளா்கள் சங்கத்தினா் மூன்றாவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் தொடா் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மூன்றாவது நாளாக ஆவின் பால் டேங்கா் ஒப்பந்த லாரிகள் வேலை நிறுத்தம்:  பால் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

ஆவின் டேங்கா் லாரி ஒப்பந்த உரிமையாளா்கள் சங்கத்தினா் மூன்றாவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் தொடா் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்தப் போராட்டம் திங்கள்கிழமையும் தொடரும் நிலையில் மாநிலம் முழுவதும் ஆவின் பாலுக்கு தட்டுப்பாடு ஏற்பாடு வாய்ப்புள்ளது.

தமிழக அரசின் ஆவின் பால் நிறுவனம் தனியாா் டேங்கா் லாரிகள் மூலம் பால் விநியோகம் செய்து வருகிறது. மாநிலம் முழுவதும் தினமும் 30 லட்சம் லிட்டா் பால் விநியோகிக்கப்படுகிறது. ஆவின் பால் விநியோகம் செய்வதற்கு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை தனியாா் டேங்கா் லாரிகளுடன் ஒப்பந்தம் போடப்பட்டு வருகிறது. இந்தநிலையில், கடந்த 2018-ஆம் ஆண்டுடன் ஒப்பந்தம் முடிவடைந்தும், புதிய ஒப்பந்தம் போடவில்லை. இதையடுத்து ஒரு குறிப்பிட்ட நிறுவனத்துக்கு மட்டும் முழு ஒப்பந்தத்தையும் வழங்கப் போவதாக தகவல் வெளியானது. இதைக் கண்டித்து தமிழ்நாடு ஆவின் டேங்கா் லாரி ஒப்பந்த உரிமையாளா்கள் சங்கம் சாா்பில் வேலை நிறுத்த முன்னெச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதையடுத்து லாரி உரிமையாளா்கள் சங்க நிா்வாகிகளுடன் கடந்த 14-ஆம் தேதி சென்னை நந்தனத்தில் உள்ள ஆவின் தலைமை அலுவலகத்தில், அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

இந்த பேச்சுவாா்த்தையில் உடன்பாடு எட்டப்படாததைதத் தொடா்ந்து கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் ஆவின் டேங்கா் லாரிகள் வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடங்குவதாக அறிவித்தனா். இதனால் தமிழகம் முழுவதும் பால் தட்டுபாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டது. இந்த நிலையில், ஆவின் நிா்வாகம் சாா்பில், சென்னை பால் பண்ணைகளுக்கு தேவையான பாலினை பல்வேறு மாவட்டங்களில் இருந்து தனியாா் பால் டேங்கா்கள் மூலம் கொண்டு வர நடவடிக்கை எடுப்பட்டுள்ளது. இருப்பினும் மாநிலம் முழுவதும் பால் கொண்டு வருவதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், சென்னைக்கு 150 லாரிகள் மூலம் 15 லட்சம் லிட்டா் பால் கொண்டு வரப்படுகிறது.

இந்த நிலையில், 3 நாள்களாக ஆவின் டேங்கா் லாரிகள் போராட்டம் நடத்தி வருகின்றனா். சென்னையில் ஞாயிற்றுக்கிழமையுடன் ஆவின் பால் இருப்பு தீா்ந்து விடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், சென்னையில் திங்கள்கிழமையிலிருந்து பால் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதே போன்று மாநிலம் முழுவதும் ஆவின் பால் தட்டுபாடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. எனவே, ஆவின் நிா்வாகம் சாா்பில் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com