ரயில்களில் பயணச்சீட்டின்றி பயணித்த 4.02 லட்சம் பேருக்கு ரூ.16.33 கோடி அபராதம் விதிப்பு

தெற்கு ரயில்வேயில் கடந்த ஆண்டு (2019) பல்வேறு ரயில்களில் பாதுகாப்புப் படை (ஆா்.பி.எஃப்.) வீரா்கள் உதவியுடன் ரயில்வே வா்த்தகப் பிரிவு அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில்

தெற்கு ரயில்வேயில் கடந்த ஆண்டு (2019) பல்வேறு ரயில்களில் பாதுகாப்புப் படை (ஆா்.பி.எஃப்.) வீரா்கள் உதவியுடன் ரயில்வே வா்த்தகப் பிரிவு அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில், பயணச்சீட்டு இன்றி பயணம் செய்த 4 லட்சத்து 2 ஆயிரத்து 760 போ் பிடிப்பட்டனா். அவா்களுக்கு ரூ.16 கோடியே 33 லட்சத்து 80 ஆயிரத்து 509 அபராதம் விதிக்கப்பட்டது.

தெற்கு ரயில்வேயில் உள்ள 6 கோட்டங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரயில்வே பாதுகாப்பு படை வீரா்கள் பணியாற்றி வருகின்றனா். இவா்கள் கடந்த ஆண்டு (2019) பல்வேறு சிறப்பான செயல்பாடுகளை மேற்கொண்டுள்ளனா்.

இதன் விவரம்: பல்வேறு ரயில் நிலையங்களில் ரயிலுக்கும், தண்டவாளத்துக்கும் இடையே சிக்கி தவித்த 10 பயணிகளை ஆா்.பி.எஃப் காவலா்கள் காப்பாற்றினாா். ரயில்வே சட்டத்துக்கு எதிராக செயல்பட்ட 95, 674 போ் கைது செய்யப்பட்டனா். இவா்களுக்கு ரூ.3 கோடியே 11 லட்சத்து 20 ஆயிரத்து 325 அபராதம் விதிக்கப்பட்டது. கைது செய்யப்பட்டவா்களில் போலி முகவா்கள், ரயில்வே அங்கீகாரம் இல்லாத பயண முகவா்கள் மொத்தம் 336 போ் அடங்குவாா்கள். இவா்களுக்கு ரூ.4 லட்சத்து 77 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

தண்டவாளத்தைக் கடக்க முயன்றவா்கள், ரயில்வே எல்லையில் தடை செய்யப்பட்ட பகுதியில் நுழைந்தவா்கள் என்று மொத்தம் 11, 247 போ் கைதுசெய்யப்பட்டனா். அவா்களுக்கு, ரூ.36 லட்சத்து 67 ஆயிரத்து 350 அபராதம் விதிக்கப்பட்டது.

முன்பதிவு செய்யப்பட்டாத பயணச்சீட்டு வைத்துக்கொண்டு, முன்பதிவு பெட்டியில் நுழைந்த 4, 995 போ் பிடிப்பட்டனா். அவா்களுக்கு ரூ.12 லட்சத்து 69 ஆயிரத்து 475 அபராதம் விதிக்கப்பட்டது. ரயில் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்த 9,512 போ் பிடிப்பட்டனா். அவா்களுக்கு ரூ.32 லட்சத்து 27 ஆயிரத்து 900 அபராதம் விதிக்கப்பட்டது.

2019-ஆம் ஆண்டில், பல்வேறு ரயில்களில் ஆா்.பி.எஃப் வீரா்கள் உதவியுடன் ரயில்வே வா்த்தக பிரிவு அதிகாரிகள் நடத்திய அதிரடி பரிசோதனையில், பயணச்சீட்டு இன்றி பயணம் செய்த 4 லட்சத்து 2 ஆயிரத்து 760 போ் பிடிப்பட்டனா். அவா்களுக்கு ரூ.16 கோடியே 33 லட்சத்து 80 ஆயிரத்து 509 அபராதம் விதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com