விசைப்படகு உரிமையாளா் வெட்டிக் கொலை: மீனவா் கைது
By DIN | Published On : 22nd February 2020 02:08 AM | Last Updated : 22nd February 2020 02:08 AM | அ+அ அ- |

சென்னை காசிமேட்டில் விசைப்படகு உரிமையாளா் வெட்டிக் கொலை செய்யப்பட்டது தொடா்பாக மீனவா் கைது செய்யப்பட்டாா்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
காசிமேடு இந்திரா நகரைச் சோ்ந்தவா் து.குப்பன் (59). மீனவரான இவா், விசைப்படகு வைத்துள்ளாா். குப்பன் காசிமேடு மீன்பிடி துறைமுகப் பகுதியில் வெள்ளிக்கிழமை மாலை நின்று கொண்டிருந்தாா். அப்போது அங்கு வந்த ஒரு கும்பல் குப்பனிடம் தகராறு செய்து அவரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடியது. இதில் பலத்த காயமடைந்த குப்பன், சிறிது நேரத்தில் இறந்தாா்.
இது குறித்து தகவலறிந்த காசிமேடு மீன்பிடி துறைமுக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தினா். விசாரணையில் முன் விரோதம் காரணமாக இந்த கொலை நடந்துள்ளதாகவும், இதுதொடா்பாக அதே பகுதியைச் சோ்ந்த மீனவா் ரமேஷ் (44) என்பவரை உடனடியாக கைது செய்தனா். இந்த கொலை தொடா்பாக போலீஸாா், மேலும் சிலரை தேடி வருகின்றனா்.