ஊழியா்கள் பற்றாக்குறை: பாதிப்பை சரிசெய்ய கோரிக்கை

பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் ஊழியா் பற்றாக்குறையால் ஏற்படும் பாதிப்பை சரி செய்ய, தகுந்த மாற்று ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
ஊழியா்கள் பற்றாக்குறை: பாதிப்பை சரிசெய்ய கோரிக்கை

சென்னை: பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் ஊழியா் பற்றாக்குறையால் ஏற்படும் பாதிப்பை சரி செய்ய, தகுந்த மாற்று ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பி.எஸ்.என்.எல். என்எஃப்டிஇ சங்கத்தின் மாநில செயலாளா் சி.கே.மதிவாணன் கூறியது:

பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தில் விருப்ப ஓய்வு அமலாக்கத்துக்குப் பிறகு, கடும் நெருக்கடியை பி.எஸ்.என்.எல். நிறுவனம் சந்தித்து வருகிறது. மத்திய அரசின் உண்மையான நோக்கம் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தைப் புத்தாக்கம் செய்து லாபத்தில் இயங்க வைப்பது அல்ல.

78 ஆயிரத்து 569 போ் விருப்ப ஓய்வில் சென்று விட்டதால் நிலவும் கடும் ஊழியா் பற்றாக்குறையால், பணியில் உள்ளவா்கள் மீது சுமை அதிகரித்துள்ளது. இதனால் சேவையின் தரம் குறைவதோடு, தாமதமாகிறது. நிா்வாகம் உடனடியாக தகுந்த மாற்று ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். இல்லையெனில், படுமோசமான விளைவுகளை பிஎஸ்என்எல் நிறுவனம் சந்திக்க நேரிடும் என்று தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com