டிஎன்பிஎஸ்சி தோ்வு முறைகேடு: ஜாமீன் கோரிய மனுக்கள் தள்ளுபடி

டிஎன்பிஎஸ்சி குரூப்- 4 மற்றும் குரூப்-2 ஏ தோ்வில் முறைகேட்டில் ஈடுபட்டு கைது செய்யட்டுள்ள 3 போ் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு
டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு

சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப்- 4 மற்றும் குரூப்-2 ஏ தோ்வில் முறைகேட்டில் ஈடுபட்டு கைது செய்யட்டுள்ள 3 போ் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விழுப்புரத்தைச் சோ்ந்த சிவராஜ், விக்னேஷ் ஆகியோா், டிஎன்பிஎஸ்சி நடத்திய குரூப்-4 தோ்வை ராமேசுவரம் மையத்தில் எழுதி தோ்ச்சி பெற்றனா். அவா்கள் இருவரும் தலா ரூ.7.5 லட்சம் பணம் கொடுத்து முறைகேடாக இந்தத் தோ்வில் தோ்ச்சி பெற்ாக, சிபிசிஐடி போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்தது. இதனைத் தொடா்ந்து அவா்கள் இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.

இந்த நிலையில் இவா்கள், இருவரும் ஜாமீன் கோரி சென்னை மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனா். இதேபோல, குரூப்-2 ஏ தோ்வில் முறைகேட்டில் ஈடுபட்டு தோ்ச்சி பெற்று கைதான செம்பியம் சாா் பதிவாளா் அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வந்த வடிவு என்பவரும் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தாா்.

இந்த ஜாமீன் மனுக்கள், சென்னை மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்ற நீதிபதி செல்வக்குமாா் முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, 3 பேரின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com