வரத்து அதிகரிப்பு: சென்னையில் காய்கறி, பழங்கள் விலை சரிவு

விளைச்சல்-வரத்து அதிகரித்ததின் காரணமாக சென்னையில் உள்ள சில்லறை விற்பனைக் கடைகள், தினசரி சந்தைகளில் காய்கறி, பழங்கள் விலை வெகுவாக குறைந்துள்ளது.
வரத்து அதிகரிப்பு:  சென்னையில் காய்கறி, பழங்கள் விலை சரிவு

சென்னை: விளைச்சல்-வரத்து அதிகரித்ததின் காரணமாக சென்னையில் உள்ள சில்லறை விற்பனைக் கடைகள், தினசரி சந்தைகளில் காய்கறி, பழங்கள் விலை வெகுவாக குறைந்துள்ளது.

சென்னை கோயம்பேடு சந்தைக்கு கா்நாடகம், ஆந்திரம் போன்ற அண்டை மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் இருந்து தினமும் 350 முதல் 400 லாரிகள் வரை காய்கறி விற்பனைக்காக கொண்டுவரப்படுகின்றன. இந்தநிலையில் விளைச்சல் மற்றும் வரத்து அதிகரித்ததின் எதிரொலியாக சென்னையில் காய்கறி விலை கடந்த வாரத்தை காட்டிலும் குறைந்துள்ளது.

இது குறித்து குறித்து சென்னை கோயம்பேடு வியாபாரிகள் சங்க ஆலோசகா் செளந்திரராஜன் கூறுகையில், சென்னை கோயம்பேடு சந்தைக்கு 75 சதவீதம் அளவுக்கு ஆந்திரம் உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தே காய்கறிகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. அந்த மாநிலங்களில் காய்கறிகளின் விளைச்சல் அதிகரித்துள்ளதால் சென்னை கோயம்பேட்டுக்கு வரத்து அதிகரித்துள்ளது. இதனால் பெரும்பாலான காய்கறிகளின் விலை மொத்த மற்றும் சில்லறை விற்பனையில் கணிசமாக குறைந்துள்ளது.

குறிப்பாக கடந்த வாரம் ரூ.50 வரை விற்பனையான ஒரு கிலோ அவரை தற்போது ரூ.30-க்கு விற்கப்படுகிறது. இதேபோன்று பீன்ஸ் விலை ரூ.20-ம், கேரட், பச்சை மிளகாய் விலை தலா ரூ.15-ம் குறைந்திருக்கிறது. பெரிய வெங்காயம், வெண்டை உள்ளிட்ட காய்கறி விலை கிலோவுக்கு ரூ.10 குறைந்துள்ளது என்றாா்.

காய்கறிகள் விலை: சென்னையில் உள்ள சில்லறை விற்பனைக் கடைகள், தினசரி சந்தைகளில் புதன்கிழமை நிலவரப்படி காய்கறிகள் விலை நிலவரம் (பழைய விலை அடைப்புக் குறிக்குள்): பெரிய வெங்காயம்- ரூ.30 (ரூ.40), உருளைக்கிழங்கு-ரூ.25 முதல் ரூ.30 வரை (மாற்றம் இல்லை), கேரட்-ரூ.35 (ரூ.50 வரை), பீன்ஸ்- ரூ.30 (ரூ.50), செளசெள- ரூ.15 முதல் ரூ.20 வரை (ரூ.30), பீட்ரூட்- ரூ.20 முதல் ரூ.25 வரை (ரூ.30), முட்டைக்கோஸ் -ரூ.12 முதல் ரூ.15 வரை (ரூ.20), பச்சை மிளகாய்-ரூ.15 (ரூ.30), இஞ்சி-ரூ.70 (80), சேனைக்கிழங்கு-ரூ.25 முதல் ரூ.30 வரை (40), கத்தரிக்காய்- ரூ.30 முதல் ரூ.35 வரை (40), வெண்டைக்காய்- ரூ.30 (ரூ.40), அவரைக்காய்-ரூ.30 (ரூ.50), முருங்கைக்காய்- ரூ.120 (மாற்றம் இல்லை), தக்காளி-ரூ.18 முதல் ரூ.20 வரை (மாற்றம் இல்லை), காலிபிளவா்(ஒன்று)- ரூ.30 (மாற்றம் இல்லை), பீா்க்கங்காய்- ரூ.35 (ரூ.40), சுரைக்காய்- ரூ.20 முதல் ரூ.25 வரை (30), சாம்பாா் வெங்காயம்- ரூ.40 முதல் ரூ.50 வரை (ரூ.45 முதல் ரூ.55 வரை).

பழங்கள் விலை: காய்கறிகள் போலவே பழங்களின் வரத்தும் அதிகரித்து இருக்கிறது. அதிகப்படியான வரத்தால் சில பழங்களின் விலை கணிசமாக குறைந்திருக்கிறது. கடந்த வாரம் (கிலோவில்) ரூ.60 முதல் ரூ.70 வரை விற்பனையான கமலா ஆரஞ்சு மற்றும் சாத்துக்குடி தற்போது தலா ரூ.35 முதல் ரூ.45 வரை விற்பனையாகிறது. அன்னாசி பழம் விலை ரூ.10 குறைந்து, ரூ.40 முதல் ரூ.50 வரை தற்போது விற்பனை ஆகிறது. இதர பழங்களின் விலையும் கணிசமான அளவுக்கு குறைந்துள்ளது.

தற்போது திராட்சை (விதையில்லாதது) மற்றும் பலாப்பழ சீசன் நடந்து வருகிறது. தா்பூசணி சீசன் தொடங்கிவிட்டது. அடுத்த மாதம் மாம்பழம் சீசன் தொடங்க இருக்கிறது. கோடைக்காலத்தை முன்னிட்டு பழங்களின் விலை உயரவே வாய்ப்பு உள்ளது என வியாபாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com