சென்னை ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் பதிப்பகம்

சென்னை ராமகிருஷ்ண மடத்தின் சார்பில் சுவாமி ஸ்ரீ ராமகிருஷ்ணாநந்தரால் கடந்த 1919- ஆம் ஆண்டு பதிப்பகம் தொடங்கப்பட்டது.
சென்னை ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் பதிப்பகம்


சென்னை ராமகிருஷ்ண மடத்தின் சார்பில் சுவாமி ஸ்ரீ ராமகிருஷ்ணாநந்தரால் கடந்த 1919- ஆம் ஆண்டு பதிப்பகம் தொடங்கப்பட்டது. தற்போது மடத்தின் சார்பில் வெளியிடப்பட்டு வரும் ஆன்மிக இதழான ராமகிருஷ்ண விஜயத்துக்கு நூற்றாண்டு விழாவானது வரும் 12-ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது.
மடத்தின் சார்பில் ராமகிருஷ்ண பரமஹம்சர், சுவாமி விவேகானந்தரின் நூல்கள் வெளியிடப்பட்டு வந்தன. இதையடுத்து பண்பாட்டு, பக்தி யாத்திரை நூல்களும் வெளியிடப்பட்டுள்ளன. ஆயிரம் தலைப்புகளில் 514 ஆன்மிகம் அடங்கிய நூல்கள் இதுவரை வெளியிடப்பட்டுள்ளன.

இளைஞர்களுக்கு வழிகாட்டும் வகையிலான சுவாமி விவேகானந்தரின் நூல்கள் இப்பதிப்பகத்தால் வெளியிடப்பட்டு லட்சக்கணக்கில் விற்கப்பட்டு வருகின்றன.பதிப்பக வெளியீடுகளில் சுவாமி விவேகானந்தரின் உன் எதிர்காலம் உன்கையில்' நூலானது சமீபத்தில் வெளியிடப்பட்டு, பெரும் வரவேற்பையும் பெற்றுள்ளது.

சுவாமி கமலாத்மானந்தரின் கைலாய யாத்திரை, பிருந்தாவன் யாத்திரை நூல்கள் பெருவாரியான பக்தர்களால் வாங்கி வாசிக்கப்பட்டும் வருகிறது. பக்தியையும், ஞானத்தையும், பண்பாட்டையும் இளைஞர்கள் அறியும் வகையிலான நூல்களும், யோகம், தியானம் மற்றும் குழந்தைகளுக்கான படக்கதைகள், நவீன சமுதாயத்திற்கேற்ற பாரம்பரிய கேள்வி-பதில்கள், சமய ஆச்சாரியர்களின் வரலாறுகள் என மனிதத்துவத்தை மேம்படுத்தும் நூல்கள் வெளியிடப்பட்டும் வருகின்றன என்கின்றனர் பதிப்பகத்தின் தொண்டர்களான வி.வெங்கடகிருஷ்ணன், காயத்ரி தம்பதி. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com