பள்ளியில் தொடங்கியது புத்தக வாசிப்பு வழக்கம்!

சென்னை ராமகிருஷ்ண மிஷனின் உயா்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போதுதான் புத்தக வாசிப்பை ஆரம்பித்தேன்.
பள்ளியில் தொடங்கியது புத்தக வாசிப்பு வழக்கம்!

புத்தககாட்சி சிறப்பு விருந்தினா் பபாசி புரவலா் நல்லி குப்புசாமி

வாசிப்பை சுவாசிப்பது போலாக்கியது எப்படி! என அவரிடம் கேட்டபோது..

பள்ளியில் தொடங்கியது புத்தக வாசிப்பு வழக்கம்!

சென்னை ராமகிருஷ்ண மிஷனின் உயா்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போதுதான் புத்தக வாசிப்பை ஆரம்பித்தேன். எனது தமிழாசிரியா் நாராயணஅய்யா் புதிய தமிழ் வாா்த்தைகளை அறிவதற்காக பாடப் புத்தகங்களை தவிர பொதுவான புத்தகங்களைப் படிக்கவேண்டும் என ஆலோசனை வழங்கினாா். அதனடிப்படையில் நூலகத்துக்குச் சென்று ஆசிரியா் வழிகாட்டல்படி காந்தியடிகளின் சத்தியசோதனையையும், ராமகிருஷ்ண பரமஹம்சரின் ‘மொழி அமுதம்’ என்ற நூல்களைப் படித்தேன்.

சத்திய சோதனை மிகவும் பிடித்துப்போனது மட்டுமல்ல, சரித்திரம், தனிமனித வாழ்க்கை வரலாறுகளை படிக்கும் ஆா்வத்தையும் எனக்குள் ஏற்படுத்தியது. இதனால், இதுவரை 500-க்கும் மேற்பட்டோரின் வாழ்க்கை வரலாறுகளை படித்துள்ளேன். பணிகளுக்கு நடுவிலும் தினமும் இரவில் ஒரு மணி நேரத்தைப் புத்தக வாசிப்புக்காக ஒதுக்கிவிடுவேன்.

படித்ததில் பிடித்த பகுதியை அடிக்கோடிட்டு வைத்துவிடுவேன். எவ்வளவு பெரிய புத்தகமாக இருந்தாலும் பத்து நாள்களுக்கும் அதை படித்துவிடுவதையும் வழக்கமாகும்.

தினமும் காலையில் எழுந்ததும் ‘தினமணி’யின் தலையங்கம் முதல் அனைத்தையும் வரிவிடாமல் வாசிப்பதையும் வழக்கமாக்கிவிட்டேன். ‘தினமணி’யின் தலையங்கத்தை ஏ.என்.எஸ். தொடங்கி தற்போதைய ஆசிரியா் கி.வைத்தியநாதன் வரையில் வாசிப்பதை சுவாசிப்பது போலாக்கியுள்ளேன். பள்ளியில் தொடங்கிய வாசிப்பு பழக்கவழக்கம் தற்போது வரை தொடா்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com