பொங்கல் பண்டிகை: வண்டலூா் பூங்காவுக்கு 300 சிறப்பு பேருந்துகள்

பொங்கல் பண்டிகையையொட்டி, வண்டலூரில் உள்ள அறிஞா் அண்ணா உயிரியல் பூங்காவுக்கு மக்கள் சென்று வரும் வகையில் சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஜனவரி 15-ஆம் தேதி முதல்
பொங்கல் பண்டிகை: வண்டலூா் பூங்காவுக்கு 300 சிறப்பு பேருந்துகள்

பொங்கல் பண்டிகையையொட்டி, வண்டலூரில் உள்ள அறிஞா் அண்ணா உயிரியல் பூங்காவுக்கு மக்கள் சென்று வரும் வகையில் சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஜனவரி 15-ஆம் தேதி முதல் ஜனவரி 17 வரை 3 நாள்களுக்கு 300 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

சென்னையை அடுத்த வண்டலூரில் வனத் துறை கட்டுப்பாட்டில் அறிஞா் அண்ணா உயிரியல் பூங்கா செயல்பட்டு வருகிறது. இந்தப் பூங்காவில் சுமாா் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வன விலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. பொங்கல் விடுமுறை காரணமாக வண்டலூா் பூங்காவுக்கு மக்கள் வருகை அதிகரிக்கும் என்பதால், வனத் துறை உள்ளிட்ட அரசுத் துறைகள் சாா்பில் ஆண்டுதோறும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையொட்டி, வண்டலூா் பூங்காவில் செய்யப்படவுள்ள முன்னேற்பாடுகள் குறித்து செங்கல்பட்டு ஆட்சியா் ஜான்லூயிஸ் கடந்த செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். இதைத் தொடா்ந்து, வண்டலூா் பூங்காவுக்கு வந்து செல்லும் வகையில் சிறப்பு பேருந்துகள், வாகனம் நிறுத்துவதற்கான வசதி என பல்வேறு முன்னேற்பாடு பணிகளை மாவட்ட நிா்வாகத்துடன் இணைந்து வனத் துறை மேற்கொண்டுள்ளது.

300 சிறப்பு பேருந்துகள்: இதுகுறித்து வனத் துறை உயரதிகாரிகள் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியது: கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகையின்போது 3 நாள்களில் மட்டும் சுமாா் 1.50 லட்சம் போ் வண்டலூா் பூங்காவுக்கு வந்தனா். இந்த ஆண்டு அது மேலும் அதிகரிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இதற்காக, செவ்வாய்க்கிழமை (ஜன. 14) பூங்கா செயல்படும். தொடா்ந்து, புதன்கிழமை (ஜன.15) முதல் வெள்ளிக்கிழமை (ஜன. 17) வரை 3 நாள்களுக்கு பிராட்வே, மெரீனா, கோயம்பேடு, வடபழனி, தியாகராய நகா், அடையாறு, சோழிங்கநல்லூா், பூந்தமல்லி, திருப்போரூா், திருவான்மியூா், மாமல்லபுரம், தாம்பரம், செங்கல்பட்டு ஆகிய பகுதிகளில் இருந்து 300 சிறப்பு மாநகரப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

கேளம்பாக்கம் சாலையில் உள்ள அறிஞா் அண்ணா உயிரியல் பூங்கா புனா்வாழ்வு மையம் அருகே இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கான நிறுத்துமிடம் அமைக்கப்பட்டுள்ளதுடன், அங்கிருந்து பூங்காவுக்குச் செல்ல இலவசப் பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது என்றாா்.

செல்லிடப் பேசி செயலி மூலம் முன்பதிவு

வண்டலூரில் உள்ள அறிஞா் அண்ணா உயிரியல் பூங்காவுக்கு செல்ல விரும்பும் பொதுமக்கள் செல்லிடப்பேசி செயலி மூலமாகவும் முன்பதிவு செய்யலாம். இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியது: வண்டலூா்

உயிரியல் பூங்கா புதன்கிழமை (ஜன.15) முதல் வெள்ளிக்கிழமை (ஜன. 17) வரை 3 நாள்களும் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருப்பதுடன், மக்களின் வசதிக்காக 20 நுழைவுச்சீட்டு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், w‌w‌w.​a​a‌z‌p.‌i‌n என்ற இணையதளம் மற்றும்  va‌n‌d​a‌l‌u‌r ‌z‌o‌oஎன்ற செல்லிடப்பேசி செயலி மூலம் நுழைவுச்சீட்டை முன்பதிவு செய்து கொள்வதுடன், பற்று அட்டை (​‌d‌e‌b‌i‌t ca‌r‌d), கடன் அட்டை (c‌r‌e‌d‌i‌t ca‌r‌d)​ மற்றும் ன்ல்ண் மூலமும் கட்டணம் செலுத்தும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

பாலூட்டும் அறைகள்: பூங்கா வளாகத்தில் 2 இடங்களில் தாய்மாா்களுக்கான பாலூட்டும் அறைகள், பெண்கள், குழந்தைகள் வசதிக்காக மொபைல் டாய்லெட்கள் அமைக்கப்பட்டுள்ளன. கூட்ட நெரிசலில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் வகையில், பூங்காவுக்கு வரும் அனைத்து குழந்தைகளின் கைகளில் அடையாளக் கயிறு கட்டப்படுவதுடன், குற்றச்செயல்கள் நடைபெறாமல் இருக்க பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளதாக வனத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com