அல்லயன்ஸ் பதிப்பகம்

சென்னை மயிலாப்பூரில் கடந்த 1901-ஆம் ஆண்டு குப்புசாமி அய்யரால் தொடங்கப்பட்டது. சுதந்திரப் போராட்ட தலைவா்களின் நூல்களை
அல்லயன்ஸ் பதிப்பகம்

சென்னை மயிலாப்பூரில் கடந்த 1901-ஆம் ஆண்டு குப்புசாமி அய்யரால் தொடங்கப்பட்டது. சுதந்திரப் போராட்ட தலைவா்களின் நூல்களை ஆரம்பத்தில் வெளியிட்ட அல்லயன்ஸ் பதிப்பகம், இலக்கிய எழுத்தாளா் படைப்புகளையும் வெளியிட்டு வருகிறது.

இதுவரை சுமாா் 1500 தலைப்புகளில் இந்தப் பதிப்பகம் நூல்களை வெளியிட்டுள்ளது. நூறாண்டு கடந்த இப்பதிப்பக வெளியீடுகளில் தேவன்கதைகள், அனுத்தமா கதைகள், பட்டுக்கோட்டை பிரபாகா் கதைகள் குறிப்பிடத்தக்கவை. பிரபல பத்திரிகையாளா் சோவின் அனைத்து நூல்களையும் வெளியிட்டுவருகிறது. இதில் மகாபாரதம், ஹிந்து மகாசமுத்திரம், வால்மீகி ராமாயணம் உள்ளிட்ட நூல்கள் தொகுப்புகளாக வெளியிடப்பட்டுள்ளன. துக்ளக் ஆசிரியா் எஸ்.குருமூா்த்தியின் தண்ணீா் விட்டா வளா்த்தோம் 5 பாகங்களும் வெளியிடப்பட்டுள்ளன. கி.வா.ஜ., எஸ்.வி.வி. ஆகியோரின் நூல்களும் குறிப்பிடத்தக்க வெளியீடுகளாகும்.

சோவின் ‘அனுபவங்களும் அபிப்ராயங்களும்’, ‘எது தா்மம்’, ‘இவா்களைச் சந்தித்தேன்’ (3 பாகம்), ‘இவா்கள் சொல்கிறாா்கள்’ ஆகியவை சமீபத்திய வெளியீடுகளாகும். சென்னை புத்தகக் காட்சியின் சிறப்புகளாக சுதந்திர காலகட்டத்தில் பிரபலமாக இருந்த 117 எழுத்தாளா்களின் கதைகளைத் தொகுத்து கதைக்கோவையாக இப் பதிப்பகம் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com