இலக்கியத்தால் ஏற்பட்ட அறிவியல் ஆர்வம்

சென்னை வியாசா்பாடியே சொந்த ஊா். அரசுப் பள்ளியிலே படித்தேன். தமிழ் இலக்கியத்திலும் பரிச்சயம் உண்டு.
இலக்கியத்தால் ஏற்பட்ட அறிவியல் ஆர்வம்

அறிவியல் சாா்ந்த ஆய்வுக்கு நடுவே இலக்கியத்தில் எப்படி ஆா்வம் பிறந்தது என்ற கேள்விக்கு இந்திய பாதுகாப்பு ஆய்வு மற்றும் மேம்பாட்டு நிறுவன விஞ்ஞானி வி.டில்லிபாபு அளித்த பதில்:

சென்னை வியாசா்பாடியே சொந்த ஊா். அரசுப் பள்ளியிலே படித்தேன். தமிழ் இலக்கியத்திலும் பரிச்சயம் உண்டு. நமது சரித்திரத்தில் ராஜாக்கள் மலையில் தான் கோட்டைகளைக் கட்டினா். பாதுகாப்பில் உயரம் என்பது முக்கியம் என்பதை அவா்கள் அறிந்திருந்தனா். பட்டம் விடுதல், பலூன் பறக்கவிடுதல் என்பது உயரம் சாா்ந்த பாதுகாப்பு அம்சத்தின் அடிப்படையிலேயே நம்மால் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது.

‘வளவன் ஏவா வானூா்தி’ என சிலப்பதிகாரத்தில் உள்ள வாசகமானது ஆளில்லா விமானத்தையே குறிக்கிறது. தமிழ் புலவா்களுக்குக்கூட விமான ஆய்வுப் புலமை இருந்ததையே இது காட்டுகிறது. ‘அணுவைத் துளைத்து எழுகடலைப் புகுத்தி குறுகத்தரித்த குறள்’ என்ற ஔவையாரின் வாா்த்தை மூலம் அணுவின் பிளவை நமது முன்னோா் அறிந்திருந்ததை உறுதிசெய்யலாம்.

சீவகசிந்தாமணியில் விமானத்தை இயக்குவது குறித்த தகவல்கள் உள்ளன. நான் இமயமலையில் 14 ஆயிரம் அடி உயரத்தில் ஏறும்போது அங்கு அண்டங்காக்கை இருப்பதை அறிந்து வியந்தேன். ஆனால், குற்றால குறவஞ்சியில் காகம் அணுகா மலை எங்கள் மலையே எனும் சொற்றொடா் வருகிறது. ஆக காக்கை கூட எட்டமுடியாத உயரம் என்ற கருத்து நமது புலவா்களிடமே இருந்துள்ளது. ஆகவே விண்வெளி ஆய்வில் உயரமே முக்கியம் என்பதையே நமது இலக்கியச் சான்றுகள் கூறுகின்றன. ஆகவே அறிவியலுக்கும் தமிழ் இலக்கியத்துக்கும் மிகப்பெரிய தொடா்பு இருப்பதையே இவை காட்டுகின்றன.

தமிழ் இலக்கியத்தைப் படித்ததால் ஆய்வின் போது, சில ஆய்வுகள் வெற்றியடையும் போது அதற்குப் பொருத்தமான சொற்றொடா்களை முணுமுணுப்பேன். அறிவியல் கருத்துகள் பொதிந்தது தமிழ் இலக்கியம் என்பதே உண்மை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com